All India Imaam's Council

ஆல் இந்திய இமாம்'ஸ் கவுன்சில்

 
 

       படத்தொகுப்பு                    விளம்பரங்கள்                     பத்திரிக்கையாளர் சந்திப்பு

 
 

                           இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் பள்ளிவாசல் இமாம்கள் ஆகியோர் நாடு முழுவதுமிருந்து சென்னை எழும்பூரில் உள்ள ஃபைஸ் மகாலில் அமைக்கப்பட்ட ஷஹித் சையத் அஹமத் நகரில் நேற்று (29-09-2009) அகில இந்திய இமாம்கள் கவுன்சில் என்ற தேசிய அளவிலான இமாம்களுக்கான இயக்கத்தை துவக்க திரண்டனர்.

                         உலமா (மார்க அறிஞர்கள்) இமாம்கள் (மஸ்ஜிதுகளில் தொழுகை நடத்தும் தலைவர்கள்) முஅல்லிமீன்கள் (மதரஸா ஆசிரிய பெருந்தகைகள்) ஆகியோர்தாம் இஸ்லாமிய சமுதா தங்களது மேலான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இஸ்லாத்தை பொறுத்தவரையில் பாரம்பரியமாக பள்ளிவாயில்கள் என்பது சமுகத்தின் அனைத்து நடவடிக்கைகளின் மையமாக திகழ்கின்றது. இமாம்கள் என்போர் நபி(ஸல்) அவர்களின் வாரிசுகளாவர். மக்களை மனித நேயமிக்கவர்களாக நேரான வழியில் தொடர்ந்து பயணிக்க பாதை வகுத்து தரக்கூடியவர்களாக அதன் முலம் சுதந்திரம் நீதி பாதுகாப்புடன் கூடிய சமூகத்தை கட்டமைக்கைகூடிய புனித பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

                          துரதிஷ்டவசமாக இன்று பள்ளியில் தொழுகை நடத்துவது மதரஸாவில் பாடம் நடத்துவது என்று இவர்கள் சேவை சுருக்கப்பட்டுவிட்டது. இவர்களின் சமூக பங்களிப்பு இன்று சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை. அன்மை காலமாக இந்த நிலமை மாற்ற ஓர் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. கேரளா கர்நாடகம். தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் கடந்த இரண்டு வருடமாக சிறப்பாக செயல்பட்டுவரும் இமாம் கவுன்சில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இமாம் பெருந்தகைகளுக்கு பெறும் உந்துதலாக இருந்தது. இந்த சமூக உந்துதலின் விளைவுதான் தேசிய மார்க அறிஞர்களின் சந்திப்பு. நீண்ட ஏக்கத்தின் விளைவு அகில இந்திய இமாம் கவுன்சிலின் துவக்கம். சக்திபடுத்துதலுக்காக மார்க்க அறிஞர்கள் என்பதுதான் இந்த தேசிய மார்க்க அறிஞர்களின் சந்திப்பின் மையக்கருத்து.

கலந்தாய்வின் தீர்மானங்கள் பின்வருவன:-

 1. சமூகத்தின் ஒட்டுமொத்த சக்திபடுத்துதலில் மார்க்க அறிஞர்கள் முன்னிலை வகிப்பர். அதாவது அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் சமூக பொருளாதார கல்வி அரசியல் சமநீதி பெருவதற்கான நடவடிக்கை என்பதுதான்.

 2. முஸ்லிமகளுக்கு பாபரி பள்ளி இடத்தையும் பாபரி பள்ளியையும் கட்டித்தர வேண்டும்.

 3. ஆக்கிரமிககப்பட்ட வக்ஃப் போர்டு சொத்துக்களை உடனடியாக மீட்க வேண்டும்.


 4. தாருல் காஸாவை நிறுவவேண்டும். அதன் மூலம் குடும்பபிரச்சனை வரதட்சணை திருமனத்தில் ஆடம்பரத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

 5. ஒவ்வொரு பள்ளிவாசலையும் சுற்றி முஹல்லா முறையை வலுப்படுத்த வேண்டும்.

 

இமாம் கவுன்சிலின் பொறுப்பாளர்கள்


தலைவர்:                                    மவுலானா உஸ்மான் பெய்க் ரஷாதி
துணை தலைவர்:                 காரி முஹம்மது இஸ்மாயில் - ஹரியானா
பொதுச்செயலாளர்:              மவுலானா ஜமீல் ஷிஹாபி - ம.பி.
செயலாளர்:                              மெளவி அப்துல் நாசர் பாகவி - கொச்சி
செயலாளர்:                              முஃப்தி இஹ்திரமுல் ஹக் - மைசூர்
பொருளாளர்:                           முஃப்தி அர்ஷத் ஹசன் பாகவ
ி

 

                      மவுலானா உஸ்மான் பெய்க் ரஷாதி அவர்கள் தொகுப்புரை வழங்க மவுலான அனீஸுர்ரஹமான் காஸிமி பொதுக்கூட்டத்தை துவக்கிவைத்தார். தொடர்ந்து புகழ்பெற்ற மார்க அறிஞர்கள் மவுலான காலித் ஸஃபியுல்லஹ் ரஹ்மானி-ஹைதராபாத் மவுலான முஹம்மது ஈஸா மன்பஈ-கேரளா மவுலான முப்தி அதீக் அஹமத் பாஸ்தவி-லக்னோ மவுலான இக்பால் காஸிமி-வேலூர் மவுலான அமீன் உஸ்மானி-டெல்லி மவுலான தர்வேஸ் ரஷாதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  சோசியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ. அபுபக்கர் அவர்கள் இறுதி உறையாற்றினார்கள்.

 

உலமாக்கள் தலைமையில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஆர்ப்பாட்டம்


                           டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு உலமாக்கள் தலைமையில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஆர்ப்பாட்டம் 6-12-2009 அன்று மாலை 3 மணியளவில் சென்னை இராஜாஜி சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 'ஆல் இந்தியா இமாம்'ஸ் கவுன்சில்' சார்பில் நடைபெற்றது. ஆல் இந்தியா இமாம்'ஸ் கவுன்சில் தமிழக தலைவர் மெளலான அப்துல் காதிர் முனீரி அவர்கள் தலைமை தாங்கினார்கள். 

                           மொளலானா முஹம்மது இப்ராஹீம் பாகவி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி துணைச் செயலாளர் மொளலானா ஆலிம் அஹமது ஷா ஹஸனி, SDPI- தமிழகத் தலைவர் மொளலானா  KK ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி, மொளலானா ஷம்சுல் இக்பால் தாவூதி, மொளலானா ஏ.ஷாகுல் ஹமீது பாகவி, மொளலானா தமீம் அன்சாரி காஷிஃபி, மொளலானா KV அப்துல் காதர் காஷிமி, மொளலானா ஃபைஸுர்ரஹ்மான் மன்பயீ, PFI- மாநிலச் செயலாளர் முஹம்மது காலித் PFI சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

                         இறுதியாக ஆல் இந்திய இமாம்'ஸ் கவுன்சிலின் துணைத் தலைவர் மொளலானா அப்துல் கஃபூர் மன்பயீ அவர்கள் தீர்மானம் வாசித்தபின், மொளலன அஹமது இப்ராஹிம் ஹஸனியின் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

 

தீர்மானங்கள்:


முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையைப் பறித்து பாபரி மஸ்ஜிதை இடித்துத் தகர்த்த லிபர்ஹான் கமிஸன் குற்றம் சாட்டிய காவிக் கயவர்களான 68 குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி பாபரி மஸ்ஜிதின் இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடமே ஒப்படைக்க வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை வாக்குறுதியளித்த காங்கிரஸ் அரசே மீண்டும் அதே இடத்தில் கட்டித்தர வேண்டும்.

சென்னையில் டிசம்பர் - 6 அன்று  நடந்த ஆர்ப்பாட்டம்

     

     

     

 

 
   

மதச்சார்பின்மையை நிலைநாட்ட கட்டாய   திருமணபதிவு  சட்டத்தை  தமிழக அரசு உடனே   திரும்ப பெற வேண்டும் - ஆல் இந்திய இமாம்’ஸ் கவுன்சில் கோரிக்கை   --Click Here

 
     
     
     
     
     
     
     
     
 
© POPULAR FRONT OF INDIA