தேதி: 12.07.2009

 

 

 

தேசிய அளவிலான வழக்கறிஞர் ஒருங்கிணைப்புக் குழு சென்னையில்

நடைபெற்ற அகில இந்திய வழக்கறிஞர் கூட்டத்தில் தீர்மானம்

NATIONAL LAWYER'S NETWORK

 
   

                         இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வழக்கறிஞர்களை ஒருங்கிணைக்கும் கூட்டம் 11.07.2009 சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினால் நடைபெற்றது.

                          மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது போடப்படும் பொய்வழக்குகள் ஆகியவற்றை முன்னின்று நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீத்யை பெற்றுத்தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த வழக்கறிஞர்கள் ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

                         இக்கூட்டத்தில் வழக்கறிஞர் நவ்ஷாத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். வுழக்கறிஞர் I.M. முன்ஷி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் K.P. முஹம்மது ஷெரீப் அவர்கள் அறிமுக உரை ஆற்றினார். வழக்கறிஞர் பாஹர் யு. பர்க்கீ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அகில இந்திய தலைவர் E.M. அப்துர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

                     அதன் பிறகு நடைபெற்ற குழு விவாதத்தில் இவ்வமைப்பிற்கு. 'நேஷ்னல் லாயர்ஸ் நெட்வொர்க்' (
NATIONAL LAWER'S  NETWORK) என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் நடைபெற்ற விவாதத்தில் கீழ்கண்டோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
   
     
 
 
   

நிர்வாகிகள்:-

 
                                நேஷ்னல் லாயர்ஸ் நெட்வொர்க்கின் தலைவராக வழக்கறிஞர் I.M. முன்ஷி (அஹமதாபாத்), துணைத்தலைவர்களாக வழக்கறிஞர் அனீஸ் அலி (பெங்களூர்), வழக்கறிஞர் அஹமது பாஷா (விஜயவாடா), வழக்கறிஞர் முனைவர் சையது (புனே), பொதுச் செயலாளராக வழக்கறிஞர் பாஹர் யு . பர்க்கீ (டெல்லி), செயலாளர்களாக வழக்கறிஞர் N. முஹம்மது ஷாஜஹான் (மதுரை), வழக்கறிஞர் C. நவ்ஷாத் (கேரளா), வழக்கறிஞர் கிஸர் பாட்டேல் (அவ்ரங்காபாத்), ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர  K.P. முஹம்மது ஷரீப் (மஞ்ஞேரி, கேரளா) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

                             இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். வுழக்கறிஞர் அனீஸ் அலி நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
     
  தீர்மானங்கள்:-


                       துரிதமான வழக்கு விசாரணை, ஜாமீன் பெறுவாற்கான சட்ட பிரிவுகளை மிகவும் இலகுவாக்குதல், குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு விசாரணை நடந்து முடிந்து அவர் நிரபராதி என விடுதலை செய்யப்படும் போது அவருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவது ஆகியவற்றிற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் தேவையான சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என  ' நேஷ்னல் லாயர்ஸ் நெட்வொர்க்'  மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

                    பாபரி மஸ்ஜித் இடம் தொடர்பான வழக்கில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்களை உடனடியாக மீட்க வேண்டும் உத்திர பிரதேச அரசை ' நேஷ்னல் லாயர்ஸ் நெட்வொர்க்'  கேட்டுக்கொள்கிறது.
 
   
   
     
 
 
     
   
                               மைசூரில் சங்பரிவாரர்களால் நடத்தப்பட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அப்பாவி முஸ்லிம்கள் மீதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநில தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கர்நாடக மாநில அரசை ' நேஷ்னல் லாயர்ஸ்' நெட்வொர்க் கேட்டுக் கொள்கிறது.

                              ஆயுள் சிறைவாசிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் மத அடிப்படையிலான பாகுபாட்டை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசை ' நேஷ்னல் லாயர்ஸ் நெட்வொர்க் ' கேட்டுக் கொள்கிறது.
 
     
     
     
 
 
 
     
 
© POPULAR FRONT OF INDIA