| பிப்ரவரி
13, 14, 15 கோழிக்கோடு
|
|
| |
புதிய பாதை! புதிய இந்தியா! |
|
| |
|
|
|
இந்தியாவில் மட்டிக்கிடந்த
ஃபாசிஸம் எனும் இருள் கிழிந்து புதிய இந்தியாவை உருவாக்க
கேரளத்தில் தோன்றிய நவீன கமூக இயக்கம் (Neo-
Social Movement) இன்று துணைக்கண்டத்தின் பெரும்பாலான மாநிலங்களில்
காலூன்றியிருக்கிறது.
அந்த நவீன சமூக இயக்கம்
தேர்ந்தெடுத்த புதிய பாதையைப் பற்றிப் பிடித்து மாற்றத்தை
நோக்கி மக்கள் ஒன்றிணைந்து விரைகிறார்கள் என்பதைத்தான்
இந்த தேசிய அரசியல் மாநாட்டில் எழுச்சி அறிவிக்கிறது. |
|
| |
வலிமையான இந்தியாவை உருவரக்க கடந்த இரண்டு வருடங்களுக்கு
முன் நாம் பெங்களூரில் எடுத்துக் கொண்ட திடசங்கள்கத்தின்
வெற்றி அபாரமானது என்பதை கோழிக்கோடு மகாசமுத்திரத்துக்கு
இணையான மக்கள் சமுத்திரம் இன்று அறிவிக்கிறது. |
| |
கொடியேற்று விழாவுடன் துவங்கிய தேசிய அரசியல் மாநாடு
13. 02. 2009 காலை ஷஹீத் மரைக்கார் நகர் (கோழிக்கோடு) |
| |
தேசிய அரசியல் மாநாடு நடக்கும் கோழிக்கோடு கடற்கரை, ஷஹீத்
குஞ்ஞாலி மரைக்கார் நகரில்
13. 02. 2009 காலை
8.30 மணிக்கு
கொடியேற்று விழாவுடன் தேசிய அரசியல் மாநாட்டின்
நிகழ்ச்சிகள் பெரும் ஆரவாரங்களுடன் துவங்கியது. |
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்;தியாவின் தேசிய செயற்குழு
உறுப்பினர் மௌலானா உஸ்மான் பெய்க் ரஷாதி அவர்கள்
மாநாடுவெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். பிறகு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்;தியாவின நட்சத்திரம்
பொறிக்கப்பட்ட மூவர்ணக்கொடியை அரபிக் கடல் சாட்சியாக ஏற்றி
மாநாடு நிகழ்;ச்சிகளை துவக்கி வைத்தார். |
| |
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் கே.
ஏம். ஷரீப், துணைத்தலைவர்
ஏ. சயீது,
மாநாட்டு
ஒருங்கிணைப்பாளர் ஓ.எம்.ஏ. ஸலாம், முன்னாள் சேர்மன் இ.
அபூபக்கர்,
தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி, கேரள தலைவர்
வி.பி. நஸ்ருத்தீன், கேரள பொதுச் செயளாலர் அப்துல் மஜீத் பைஸி, தமிழக தலைவர் முஹம்மது அலி ஜின்னா, தமிழக
பொதுச்
செயளரலர் அஹ்மது
ஃபக்ருதீன்,
கர்நாடக தலைவர் அப்துல்
லத்தீஃப்,
கர்நாடக பொதுச் செயளாலர் அஃப்ஸர் பாஷா, தேசிய
செயர்குழு உறுப்பினர்கள் பேரா. பி. கோயா,
வழக்கறுஞர் கே.பி.
முஹம்மது ஷரீஃப்,
டாக்டர் மஹ்பூப் ஆவாத் ஷரீஃப்
, யாசிர்
ஹஸன் , அனீஸ்
அஹ்மத்,
முஹைதீன் குட்டி
பைஸி
, பஷீர் அஹ்மத்
உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். |
| |
தமிழகம், கேரளா,
கர்நாடகா மாநில பாப்புலர் ஃப்ரண்ட்
செயர்குழு உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு
மாநிலங்களிலிருந்தும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்று விழாவுடன் மாநாட்டின் பரபரப்பு ஆரம்பமாகியது. |
| |
மாநாட்டு திடலில் ஏற்றி வைக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்;தியாவின் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடி
நம்பிக்கை மற்றும் மாற்றத்தின் வசந்தத்தை அறிவிப்பதாக
பரபரப்புடன் பட்டொளி வீசிப் பறந்தது. அந்தப் பரபரப்பு
கொஞ்சமும் குறையாமல் தேசிய அரசியல் மாநாட்டின்
ஒருங்கிணைப்பாளர்கள் பார்த்துக் கொண்டனர். |
| |
மூன்று நாளும் தேசிய மறுமலர்சிக்கு
வித்திடக்
கூடிய கருத்தரங்குகள், விவாதங்கள்,
அரசியல் விழிப்புணர்வு
ஆய்வுகள்,
மனித உரிமை பாதுகாவலர்கள்
சந்திப்பு, பெண்கள்
மாநாடு, மாணவர் மாநாடு,
உலமாக்கள் மாநாடு... என கோழிக்கோடு
நகரம் மாற்றத்தை நோக்கிய பரபரப்பில் இயங்கியது. இந்தியாவின்
பல்வேறு மாநிலங்களிலிருந்து அறிஞர்களும் அனைத்து சமுதாயத்
தலைவர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தனர். |
| |
|
|
|
|
| |
|
|
சமூகமாற்றத்திற்கு
மாணவர்களின் ஆக்கப்பூர்வமான தலையீடு தேவை
தேசிய மாணவர்கள் மாநாட்டில் அறிவிப்பு
|
|
| |
13.02.2009 காலை 9.30
தி யானமான்நகர் (டவுன்ஹால்)
|
|
| |
|
|
| |
தேசிய அரசியல் மாநாட்டின்
முதல் நாள் நிகழ்ச்சியின் முதல் பகுதியாக தேசிய மாணவர்கள்
மாநாடு நடைபெற்றது. |
|
| |
|
|
| |
பிப்ரவரி
13 வெள்ளிக்கிழமை, காலை
9.30 மணிக்கு 'சமூக
மாற்றத்திற்கு மாணவர்களின் ஆக்கப்பூர்வமான தலையீடு அவசியம்
தேவை' என்ற பிரகடளம் கோழிக்கோடு நகரம் மாணவர்கள் மாநாட்டில் ஓங்கி ஒலித்தது. |
|
| |
|
|
| |
பாப்புலர் ஃப்ரண்டின் துணை சேர்மன் ஏ. சயீது அவர்கள்
ஆற்றிய தலைமையுரையில் இந்திய தேசம்; அறிவியலிலும்,
தொழில்
துறையிலும், கல்வியிலும் இன்னும் பிற துறைகளிலும் மற்ற
நாடுகளுடன் போட்டியிட்டு வளர்ந்து, அணுசக்தி நாடுகளில்
ஒன்றாகவும், பலமான ராணுவத்தை பெற்ற நாடாகவும் திகழ்ந்து
வருகிறது. ஆனால் கடந்த 61 ஆண்டுகளாக வளர்ச்சியின் பலன்கள்
முதலாளிகளுக்கும் உயர் ஜாதியினருக்கும் மட்டுமே சென்று
கொண்டிருக்கின்றது. விவசாயிகள் ஏழைகள் அடித்தட்டு மக்கள்
ஆகியோர் வளர்ச்சியின் பலன்களை தொட்டுக்கூடப் பார்க்க
முடிவதில்லை' என்று குறிப்பிட்டார்.
|
|
| |
|
|
| |
இங்கு மிகப்பெரிய சமூக மாற்றமொன்று தேவைப்படுகிறது.
இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்துவதாலோ விவாத அரங்குகளை
ஏற்பாடு செய்வதாலோ மட்டும் மாற்றம் தானாக வந்துவிடாது.
மாறாக போராட்டங்கள் வாயிலாகத்தான் மாற்றங்கள் உருவாக
வேண்டும். |
|
| |
|
|
| |
சமூக மாற்றத்தை கொண்டு வருவது மாணவர்களின் கடமையாகும்.
மாணவர்கள்தான் இதில் முன்னணியில் நின்று செயல்பட வேண்டும்.
என்று சயீத் அவர்கள் மாணவர் சமுதாயத்தை கேட்டுக் கொண்டார். |
|
| |
|
|
| |
டெல்லி பல்பலைக்கழக பேரா. ஏ. ஷம்சுல் இஸ்லாம் அவர்கள், 'கிளர்ச்சி
மிக்க இளைய சமுதாயம் ஒன்று திரண்டு 'சமூக மாற்றத்தில்
மாணவர்களின் பங்கு' என்ற அஜென்டாவை நிறைவேற்ற முன்வருவது
மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்' என்று கூறி மாநாட்டை
துவக்கி வைத்த அவர் 'ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும்
பாதுகாக்க வேண்டியது மாணவர்களின் கடமையாகும்.
அமெரிக்காதான்
ஜனநாயகத்தின் மிகப் பெரிய எதிரி. ஆனால் பக்கச் சார்பான
ஊடகங்களும் அமெரிக்க ஆதரவாளர்களும் 'அமெரிக்ககா தான்
ஜனநாயகத்தின் பாதுகாவலன்' என்று பொய்ப் பிரச்சாரமொன்றை
பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்' என்று அமெரிக்கா குறித்த
மாணவ சமுதாயத்தின் பார்வையை திசை திருப்பினர். |
|
| |
|
|
| |
மாணவர்களே! இவர்கள் தான் ஜனநாயகத்தின் உண்மையான
பாதுகாவலர்களா? ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்
கொள்ளும் இவர்கள் தான் ஹிரோஷமா, நாகாசாகியில் மூன்று லட்சம்
மக்களை கொன்று குவித்தார்கள். |
|
| |
|
|
| |
வியட்நாம் போரில் நான்கு மில்லியன் மக்களை கொன்று
குவித்தார்கள். ஈராக்கிலும் ஆப்கானிலும் பெண்களையும் குண்டு
போட்டு எரித்து பிணமாக்கினார்கள். அமெரிக்காவே உலகின் முதல்
தீவிரவாதி என்பதை நிரூபிக்கின்றது. |
|
| |
|
|
| |
இச்சூழலில் சமூக மாற்றத்திற்கு மாணவ சமுதாயத்தின்
ஆக்கப்பூர்வமான தலையீடு தேவை' என்று சமூக மாற்றத்திற்கு
மாணவர்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை அவர் விளங்கினார். |
|
| |
|
|
| |
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ்
அஹமது அவர்கள் தனது கருப்பொருன் விளக்க உரையில் ' உலக
ஏகாதிபத்திய சக்திகளும் இந்துத்துவ பாஸிஸ சக்திகளும் மாணவ
சமூகத்தின் வளத்தை சுரண்டி தங்களின் சுயநலத்திற்கு
பயன்படுத்திக் கொள்கிறார்கள். |
|
| |
|
|
| |
சங்பரிவார் தங்களுடைய மறைமுக அஜென்டாவை செயல் படுத்த
மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். இடஒதுக்கீட்டிற்கு எதிரான
போராட்டத்தில் இதனை நாம் பார்த்தோம்' என்று உரையாற்றினார். |
|
| |
|
|
| |
ஒரு புரோகித் பிடிபட்டுவிட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.க்கு
வேலை செய்யக்கூடிய ஆயிரமாயிரம் புரோகத்கள் ராணுவத்தில்
இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். |
|
| |
|
|
| |
மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியவாதிகளின்
சுரண்டல்களுக்கு எதிராகவும் போராட ஒரு புதிய மாணவ சக்தி
உதயமாக வேண்டும்' என்று அனீஸ் அஹமது அவர்கள் மாணவர்களின்
எழுச்சிக்கு அறிவுரை கூறினார். |
|
| |
|
|
| |
ரோனா வில்சன் (ஒருங்கிணைப்பாலர்- சி.ஆர்.பி.பி.), சாந்த்
பாஷா (ராம்
நகர், கர்நாடகா), வழக்கறிஞர் இரேஷ் (தேசிய
மாணவர்
சங்கம், கர்நாடகா), இ.கே. நூருல் அமீன் (கோழிக்கோடு), வழக்கறிஞர் ரஃபீக் குட்டி காட்டூர் (கோழிக்கோடு) ஆகியோர்
சிறப்புரையாற்றினர். |
|
| |
|
|
| |
மலையாளம் ஹிந்தி
ஆங்கிலம்
தமிழ்
கன்னடம்
உருது என
பல்வேறு மொழிகளில் சிறப்புரையாற்றியவர்கள் பேசினார்கள். |
|
| |
|
|
| |
கேரளா தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரப்பிரதேசம் பாண்டிச்சேரி மற்றும் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட நாட்டின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கன மாணவர்கள் அந்த
மாநாட்டில் கலந்து கொண்டனர். |
|
| |
|
|
| |
கேரளா மாணவர் இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்டின் தலைவர் கே.எஸ். ஷான் அவர்களின் நன்றியுரையுடன் தேசிய
மாணவர்கள் மாநாடு நிறைவுற்றது. |
|
| |
|
|
| |
|
|