Breaking News

பதிவுகள்

பதிவுகள்

அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!
Posted on Wednesday November 25, 2015

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலகக்குழு 23.11.2015 அன்று கோழிக்கோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பாவி மக்கள் மீதான நேட்டோ படைகள் மற்றும் ISIS போன்ற ஆயுத குழுக்களின் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதோடு இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏகாதிபத்திய சக்திகளும் அதற்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிக்கொள்ளும் இயக்கத்தின் வழிமுறைகள் அனைத்தும் சர்வதேச உடன்படிக்கை மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானதாக அமைந்துள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் சர்வாதிகார போக்கை மேற்கொண்டு வரும் சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் கொடுங்கோன்மைக்கு எதிரான சிரியா மக்களின் ஜனநாயக போராட்டத்தையும் வலுவிழக்க செய்கிறது.


பாபரி மஸ்ஜிதை இடித்த இடத்தில் கட்டக் கோரியும், இடித்த பயங்கரவாதிகளை தண்டிக்க கோரியும் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழுவில் தீர்மானம்!
Posted on Tuesday November 24, 2015

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 23.11.2015 அன்று திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் மாநில தலைவர் M.முகம்மது இஸ்மாயீல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய தலைவர் K.M.ஷரீஃப் அவர்கள் கலந்து கொண்டார்கள். இச்செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.


மோடி அலை பிம்பத்தை கிழித்தெறிந்த பீகார் வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள்! இந்துத்துவ ஃபாசிஸத்துக்கு தோல்வி முகத்தை காட்டிய நிதிஷ்-லாலுவுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் பாராட்டுக்கள்!
Posted on Monday November 09, 2015

பீகார் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் முதலமைச்சர் நிதிஷ்குமார், முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அமைத்த மகா கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதனை வரலாற்று வெற்றி என்றுதான் வர்ணிக்க வேண்டும். ஆமாம்…மத்தியில் ஆளும் பாஜக அரசு ஜனநாயகத்தின் வழி ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாக, அக்கட்சி தலைவர்களே எச்சரித்த நிலையில், பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்டி இருக்கிறார்கள் பீஹாரிகள்.


வெறுப்பு அரசியல் மற்றும் சகிப்பின்மையை பீகார் தோற்கடித்துள்ளது : பாப்புலர் ஃப்ரண்ட்
Posted on Sunday November 08, 2015

மதவாத சக்திகளை தோற்கடித்த பீகார் மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம். ஷெரீஃப் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது :

பீகார் மக்கள் மகா கூட்டணியை வெற்றிபெற வைத்துள்ளது இந்திய மக்கள் வெறுப்புணர்வை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையும், அனைத்து வித அச்சுறுத்தலில் இருந்தும் மதச்சார்பின்மையை பாதுகாப்பார்கள் என்பதையும் உணர்த்துவதாக உள்ளது.