Breaking News

Districts News

Press Release

புயலில் சிக்கி கடலில் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்கும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தன போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது! – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

தமிழகத்தை தாக்கிய ஒகி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயலுக்கான எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் அரசு தரப்பில் முன்கூட்டியே எடுக்காத

0 comments
flag-hosting-kanyakumari-2

குடியரசு தினத்தை முன்னிட்டு குளச்சலில் நடைபெற்ற தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி!

இந்தியாவின் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று (26.01.2017) குளச்சல் பகுதியில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட்

0 comments
Kumari (29)

குமரி மாவட்ட பாப்புலர்ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு பொதுக்கூட்டம்!

ஷரிஅத் சட்டங்களை துடைத்தெறிந்து விட்டு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக

0 comments
14199563_1169728309764922_6111583804391952740_n

நாகர்கோவிலில் எழுச்சியுடன் துவங்கியது வெறுப்பு அரசியலை நிறுத்து தேசிய பிரச்சாரம்!

மத்தியில் பி.ஜே.பி. அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்தே அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பாசிச பயங்கரவாத தலைவர்கள் இந்திய இறையாண்மையை பாதிக்கின்ற வகையில், இந்திய மக்களுக்கு இடையில்

0 comments
14021694_1137351086343555_655262199848006361_n

குமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் பங்கேற்பு!

குமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இன்று (27-08-2016) பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்

0 comments
????????????????????????????????????

குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் ஹோலி கிராஸ் மருத்துவமணை சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்!

குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் நாகர்கோவில் ஹோலி கிராஸ் மருத்துவமனை சார்பாக திருவிதாங்கோடு எம்.எஸ்.பி திருமண மண்டபத்தில் வைத்து மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில்

0 comments

கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் சந்திப்பு!

Posted On :Friday November 20, 2015

Image
சமூக நீதி போராளியும், இஸ்லாமிய அழைப்பாளரும், முதுபெரும் எழுத்தாளருமான கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் அவர்களின் மனைவி திருமதி ஜமீலா அவர்கள் நவம்பர் 13 அன்று வஃபாத்தானார்கள் (இன்னாலில்லாஹி….) கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிக்கும் முகமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று (20-11-2015) அன்னாரின் இல்லத்திற்கு நேரடியாக சென்றார்கள். இந்த சந்திப்பின்போது பல்வேறு நினைவுகளை கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

திட்டுவிளை ஏரியா பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற மக்கள் சங்கமம் மாநாடு!

Posted On :Sunday May 03, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேசம் தழுவிய அளவில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்று கொண்டிருக்கின்றது. அனைத்து சமூக மக்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் உரிமை மீட்பிற்காவும் தேசிய அளவில் செயல்பட்டு வரும் நவீன சமூக இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. அந்த இலட்சிய இலக்கின் ஒரு பகுதியாக தேசிய அளவில் மக்கள் சங்கமம் எனும் பெயரில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குமரி மாவட்டம் திட்டுவிளை ஏரியா சார்பாக மக்கள் சங்கமம் நிகழ்ச்சி திட்டுவிளை மர்ஹூம் சிக்கந்தர் ஆலீம் நினைவித்திடலில் வைத்து 2.3.2015 அன்று காலை 10 மணிக்கு துவங்கியது.

தக்கலை டிவிஷன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக எழுச்சியுடன் நடைபெற்ற “மக்கள் சங்கமம் மாநாடு”!

Posted On :Sunday April 26, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேசம் தழுவிய அளவில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்று கொண்டிருக்கின்றது. அனைத்து சமூக மக்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் உரிமை மீட்பிற்காவும் தேசிய அளவில் செயல்பட்டு வரும் நவீன சமூக இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. அந்த இலட்சிய இலக்கின் ஒரு பகுதியாக தேசிய அளவில் மக்கள் சங்கமம் எனும் பெயரில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குமரிமாவட்டம் தக்கலை டிவிசன் சார்பாக மக்கள் சங்கமம் நிகழ்ச்சி திருவிதாங்கோடு மாலிக் பின் தீனார் திடலில் வைத்து ஏப்ரல் 25,26 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

குமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டம்!

Posted On :Sunday February 22, 2015

Image
குமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இடலக்குடியில் 22.02.2014 மாலை 6.45 மணியளவில் மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. “ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்தோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட தலைவர் மாஹின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரூஹுல் ஹக் வரவேற்புரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி, மாவட்ட பொதுச் செயலாளர் அஜ்மீர் காஜா, பி.எஸ்.பி. மாவட்ட தலைவர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டம்!

Posted On :Sunday February 22, 2015

Image
குமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இடலக்குடியில் 22.02.2014 மாலை 6.45 மணியளவில் மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. “ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்தோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட தலைவர் மாஹின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரூஹுல் ஹக் வரவேற்புரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி, மாவட்ட பொதுச் செயலாளர் அஜ்மீர் காஜா, பி.எஸ்.பி. மாவட்ட தலைவர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சம

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி!

Posted On :Monday January 26, 2015

Image
இந்திய திருநாட்டின் 66-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாவட்ட அலுவலகம் அருகில் தேசிய கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலளார் ரூஹூ ல் ஹக், இளங்கடை முஸ்ஸீம் ஜமாத்தலைவர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாதவலாயத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம்!

Posted On :aturday January 17, 2015

Image
குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாதவலாயத்தில் 16.01.2015 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிக்கு நபியை நேசிப்போம் என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் மாஹின் அவர்கள் தலைமை தாங்கினார். மாதவலாயம் முன்னாள் ஜமாஅத் தலைவர் K.M ஷா, SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் காஜா மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வெள்ளாடிச்சி விளை பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்ய கோரி கன்னியாகுமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday January 07, 2015

Image
இடலாக்குடி வெள்ளாடிச்சி விளை பகுதியில் கடந்த 2ம் தேதி காலை 9.30 மணியளவில் பாஜகவை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் அரிவாள், இரும்பு கம்பி உட்பட பலத்த ஆயுதங்க்களுடன் முஸ்லிம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 30க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி உள்ளனர். அரசு பேருந்து உட்பட 20 க்கும் மேற்பட்ட வாகனங்களை கல் வீசி தாக்கி உள்ளனர். மேலும் ஷேக் அலி என்ற அப்பாவி முஸ்லிம் கூலி தொழிலாளியை கடுமையாக தாக்கி உள்ளனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்று வருகிறார்.

நாகர்கோவிலில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்!! விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் பிரச்சாரம்!

Posted On :Friday October 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்!! என்ற தலைப்பில் நாடு முழுவதும் பல்வேறு பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி 17.10.2014 அன்று மாலை 4.30 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு துவங்கியது. மாரத்தான் நிகழ்ச்சியை குமரி மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் அவர்கள் துவக்கி வைத்தார்.

குமரி மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக‌ நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!

Posted On :Sunday August 24, 2014

Image
வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. இந்த புனித ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும், சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற மினி மாரத்தான் மற்றும் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

கன்னியாகுமரியில் ஈதுல் ஃபித்ர் தினத்தன்று ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

Posted On :Tuesday July 29, 2014

Image
பயங்கரவாத இஸ்ரேலினால் இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் காஸா மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற முழக்கத்தை ஈதுல் ஃபித்ர் தினத்தன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் முன்மொழிந்தது. இதன் ஒர் பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு பின்பு “இஸ்ரேல் வீழும்! ஃபலஸ்தீன் எழுச்சி பெறும்!!” என்ற துண்டு பிரசுரமும் நான் காஸா என்ற ஸ்டிக்கரும் விநியோகித்து பலஸ்தீனில் போராடும் மக்கள் வெற்றி பெற பிராா்த்தனை செய்யுமாறு பொது மக்களை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஃபலஸ்தீன் மீது தொடரும் இஸ்ரேலின் கொலைவெறித்தாக்குதலை கண்டித்து கன்னியாகுமரியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday July 12, 2014

Image
உலக பயங்கரவாத நாடான இஸ்ரேல் கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது. சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Tuesday February 25, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணியில் தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆரம்பிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம் என்ற முழக்கத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் அணிவகுப்புடன் கூடிய ஒற்றுமை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் போன்றவை நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மின் மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Wednesday December 25, 2013

Image
கன்னியாகுமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமுகமேம்பாட்டுத்துறை சார்பாக திருவிதாங்கோட்டை சார்ந்த ஜனாப். ஜலீல் அவர்களுக்கு ரூபாய் 6000/- மதிப்புள்ள கத்தி சானை பிடிக்கும் மின் மோட்டார் 20.12.2013 அன்று வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்!!

Posted On :Saturday November 02, 2013

Image
கன்னியாகுமரி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவ மனைகள் மற்றும் பொது இடங்களை தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெறுகிறது.

கன்னியாகுமரியில் நடைபெற்ற ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Wednesday June 19, 2013

Image
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் அவர்கள் தலைமை தாங்கினார். SDPI கட்சியின் கன்னியாகுமரி தொகுதி தலைவர் சாதிக் முன்னிலை வகித்தார்.

நாகர்கோவிலில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 26-04-13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் தலைமை தாங்கினார்.

கன்னியாகுமரியில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய ஜமாஅத்தார்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Posted On :Sunday March 31, 2013

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மார்ச் – 29 அன்று மலை 4.30 மணி அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபா மாதர் சங்கத்தில் ஜமாத்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் அவர்கள் தலைமை தாங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட்[NWF] நடத்திய மனித சங்கிலி போராட்டம்:

Posted On :Thursday March 14, 2013

Image
பெண்களின் பாதுகாப்பு! நாட்டின் பாதுகாப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மார்ச் -8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

Posted On :Monday February 18, 2013

Image
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ” யூனிட்டி மார்ச் ” என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப் துவக்கவுரை நிகழ்த்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.பேரணியானது சரியாக 3 மணியளவில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி ,பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, வடசேரி பேருந்து நிலையம் வழியாக சென்று அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நிறைவு பெற்றது .தொடர்ச்சியாக பேரணியின் முடிவில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Sunday February 17, 2013

Image
கன்னியாகுமரி மாவட்டத்தின் திருவிதாங்கோடு , அழகியமண்டபம் , கோட்டார் , சூரங்குடி மற்றும் வேர்க்கிளம்பி ஆகிய இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிதாங்கோட்டில் செய்யது அலியும், அழகியமண்டபத்தில் நூர்தீனும், வேர்கிளம்பியில் ஆசிக்கும் , கோட்டார் மற்றும் சூரன்குடியில் காஜாவும் கொடி ஏற்றினார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : நாகர்கோவிலில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

Posted On :Thursday February 14, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யூனிட்டி மார்ச் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தேசிய தலைமை முடிவு செய்துள்ளது.அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற 17.02.13 அன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.

இடலாக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்

Posted On :Tuesday January 22, 2013

Image
கன்னியாகுமரி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ” தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி முகாம் “கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடியில் உள்ள குத்பா பள்ளி எதிரில் 16.01.02013 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது . இம்முகாமின் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்தனர் .

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – திருவிதாங்கோட்டில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

Posted On :Thursday December 13, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 06.12.2012 அன்று மாலை 6.00 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் தலைமை தாங்கினார் . மாவட்ட செயலாளர் அபுதாகிர் வரவேற்புரை ஆற்றினார் . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் பைஸல் அஹமது , எஸ்.டி.பிஐ கட்சியின் மாநில செயலாளர் நாஞ்சில்.செய்யது அலி , எஸ்.டி.பி.ஐ கட்சியின் குமரி மாவட்ட தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஜாகிர் ஹுசைன் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சுல்பிகர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து நாகர்கோவிலில் பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Tuesday November 20, 2012

Image
காஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 19.11.2012 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர் .

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! நாகர்கோவிலில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On :Sunday September 16, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் பிடித்த மாணவிக்கு பாராட்டு

Posted On :Thursday May 12, 2011

Image
கன்னியாகுமரி வேர்கிளம்பியில் பிளஸ் 2 தேர்வில் தாவரவியல் பாட பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி இர்ஃபானாவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பரிசு தொகை வழங்கப்பட்டது. பாட்டனி பாடத்தில் 200/200 வாங்கிய மாணவி இர்ஃபானா சூலோஜி பாடத்திர் 196/200 ம், கெமிஸ்ட்ரியில் 188/200 ம், பிசிக்ஸ்ல் 192/200 ம் பெற்று 1150 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.