Breaking News

Districts News

Posts not found

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு கீரனூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கீரனூர் நகர பொறுப்பாளர்கள் இன்று கீரனூரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பழனியில் பாஜகவின் மதவாத கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Thursday September 18, 2014

Image
பாஜக MP மற்றும் அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பாஜக MP மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜகவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

கரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

பழனியில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

கரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Thursday February 13, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.

கரூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Saturday January 18, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.