Breaking News

Districts News

popular-front-day-kadayanallur-21

கடையநல்லூரில் எழுச்சியுடன் நடைபெற்ற யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம்!

ஒடுக்கப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ம் தேதியை பாப்புலர்

0 comments
Nellai west (4)

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசே.! ஷரியத் சட்டத்தில் கை வைக்காதே.!! என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய மதச் சுதந்திரத்தை பறித்து பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும்

0 comments
13958098_1123169977761666_5598158035972539545_o

“STOP POLITICS OF HATE – வெறுப்பு அரசியலை நிறுத்து!” – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில, மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

கடந்த ஆகஸ்ட் 9,10,11 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில, மாவட்ட தலைவர்கள் கூட்டம் நெல்லை மேற்கு மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில

0 comments
FB_IMG_1456815793666

தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம்!

நெல்லைமேற்கு மாவட்டம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தென்காசியில் 28-02-2016 அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட்

0 comments

விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு நாள் மாநில செயற்குழுவில் தீர்மானம்!

Posted On : Saturday October 24, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் M.முஹம்மது ஷேக் அன்சாரி, துணைத் தலைவர் A.ஹாலித் முஹம்மது, செயலாளர்கள் J.முகம்மது ரசீன் மற்றும் A.முஹைதீன் அப்துல் காதர், பொருளாளர் T.இப்ராஹீம் பாதுஷா மற்றும் அனைத்து மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இச்செயற்குழுவில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :

நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவி!

Posted On :Monday December 15, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சமூக மேம்பாட்டுத் துறையின் மூலம் கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, சுயதொழில் உதவித் தொகை, உயர்க் கல்வி வட்டியில்லா கல்விக் கடன், பள்ளி படிப்பை பாதியில் முடித்த குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல், வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்குதல், குடிநீர் வழங்கும் திட்டம், நிவாரண உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
இந்தியாவின் வரலாற்றுச் சின்னமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 22 வருடங்களாகிறது. “மீண்டும் அதே இடத்தில் பாபர் மஸ்ஜித் கட்டி தருவோம்” என்ற மத்திய அரசின் வாக்குறுதி நடைமுறைப் படுத்தப் படாமலே இருக்கிறது. பாபரி மஸ்ஜித்தை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தரவேண்டும். மேலும் மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட லிபர்ஹான் கமிசன் வழங்கிய அறிக்கையின் படி பாபரி மஸ்ஜித்தை இடித்த 68 குற்றவாளிகளை தேச விரோத சட்டத்தில் கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் டிசம்பர் 6 அன்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக கடையநல்லூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் நீதிக்கான ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒரே நாளில் ஒரு லட்சம் இரத்ததான கொடையாளர்களை சேர்க்கும் முகாம்!

Posted On :Friday October 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இரத்ததான தன்னார்வு குழுவின் சார்பாக ஒரே நாளில் ஒரு லட்சம் இரத்ததான கொடையாளர்களை சேர்க்கும் முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்

கடையநல்லூரில் பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Friday September 19, 2014

Image
மத துவேச கருத்துக்கள் மூலம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் பி.ஜே.பி எம்.பி சாக்சி மஹாரஜை கைது செய்ய வேண்டும்.

நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சுதந்திர தின கருத்தரங்கம்!

Posted On :Friday August 15, 2014

Image
நமது நாட்டின் 68 வது சுதந்திர தின கொண்டாட்டம் அனைத்து தரப்பினராலும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக சுதந்திர தின கருத்தரங்கம் நடைபெற்றது.

நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

கடையநல்லூரில் ஈதுல் ஃபித்ர் தினத்தன்று ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

Posted On :Tuesday July 29, 2014

Image
பயங்கரவாத இஸ்ரேலினால் இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் காஸா மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற முழக்கத்தை ஈதுல் ஃபித்ர் தினத்தன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் முன்மொழிந்தது. இதன் ஒர் பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக கடையநல்லூரில் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு பின்பு “இஸ்ரேல் வீழும்! ஃபலஸ்தீன் எழுச்சி பெறும்!!” என்ற துண்டு பிரசுரமும் நான் காஸா என்ற ஸ்டிக்கரும் விநியோகித்து பலஸ்தீனில் போராடும் மக்கள் வெற்றி பெற பிராா்த்தனை செய்யுமாறு பொது மக்களை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ஃபித்ரா விநியோகம்!

Posted On :Monday July 28, 2014

Image
பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி!

Posted On :Monday July 21, 2014

Image
நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ரஹ்மத் நகர் மற்றும் மேக்கரையில் வருடந்தோறும் இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் கடந்த 20-07-2014 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது

நெல்லைமேற்குமாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற அரசு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்!

Posted On :Monday July 21, 2014

Image
சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு 2014 – 2015 ஆம் ஆண்டுகளுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கல்வி உதவித் தொகை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் விதமாகவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அரசு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் நெல்லைமேற்குமாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறைசார்பாக சங்கரன்கோவிலில் காவேரிநகர், புதுமனைதெரு, காயிதேமில்லத்தெரு ஆகிய இடங்களில் நடைபெற்றது.

கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Saturday July 19, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, வட்டியில்லா சிறு தொழில் கடனுதவி, குடிநீர் விநியோக திட்டம், இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள், நிவாரண உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது

புளியங்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Friday July 18, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, வட்டியில்லா சிறு தொழில் கடனுதவி, குடிநீர் விநியோக திட்டம், இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள், நிவாரண உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது

தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On : Friday July 18, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, வட்டியில்லா சிறு தொழில் கடனுதவி, குடிநீர் விநியோக திட்டம், இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள், நிவாரண உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது

ஃபலஸ்தீன் மீது தொடரும் இஸ்ரேலின் கொலைவெறித்தாக்குதலை கண்டித்து கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday July 12, 2014

Image
உலக பயங்கரவாத நாடான இஸ்ரேல் கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது. சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும்.

நெல்லை மேற்கு மாவாட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Thursday June 26, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது.

நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Sunday June 22, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது

தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்!

Posted On :Saturday June 14, 2014

Image
ஜூன் 14 உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை மேற்கு மாவட்ட நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பாக வடகரையில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்!

Posted On :Saturday March 08, 2014

Image
மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை மேற்கு மாவட்ட நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பாக வடகரையில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய துணை தலைவர் பாத்திமா ஆலிமா, அவர்கள் “இன்றைய பெண்களின் நிலை” என்ற தலைப்பிலும் மாநில செயற்குழு உறுப்பினர் ஹபீப் நிஷா அவர்கள் “முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி” என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள்.

சங்கரன்கோவிலில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு நெல்லை மேற்கு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம்!

Posted On :Monday February 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தையல் மிஷின்கள், மூன்று சக்கர வாகனம், ஏழைகளுக்கான பொருளாதார உதவிகள், மருத்துவ உதவிகள் மற்றும் கல்வி உதவித் தொகைகள் 15 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

நெல்லை மேற்கு மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Monday February 10, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன

கடையநல்லூரில் பாப்புலர் ஃபரண்ட் சார்பாக டெங்கு விழிப்புணர்வு மற்றும் நில வேம்புக் கசாயம் வழங்கும் முகாம்!

Posted On :Monday December 02, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக, கடையநல்லூரில் மீண்டும் பரவிவரும் மர்மக் (டெங்கு) காய்ச்சலைக் கட்டுப் படுத்தும் விதமாக ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டும் மேலும் நில வேம்புக் கசாயம் வழங்கப்பட்டும் வருகிறது.

தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் மற்றும் யோகா பயிற்சி வகுப்பு!

Posted On :Sunday November 03, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் ரத்த பிரிவு கண்டறியும் முகாம்!

Posted On : Friday October 25, 2013

Image
தென்காசி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ஏழை மற்றும் பாமர மக்களுக்கு மருத்துவம், கல்வி உட்பட பல்வேறு தொண்டுகள் நடந்து வருகிறது.

சிறை நிரப்பு பேராட்டம் ஏன்? நெல்லை ஏர்வாடியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

Posted On :Saturday September 28, 2013

Image
“அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்த இருக்கிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.

காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 17, 2013

Image
நெல்லை மேற்கு: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம்

சுதந்திர தின பொதுக் கூட்டத்திற்கு தடை! தேசிய கொடியுடன் 300க்கும் மேற்பட்டோர் கைது!

Posted On :Friday August 16, 2013

Image
நெல்லை மேற்கு: கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சுதந்திரதின பொதுக்கூட்டம் 15-08-2013 அன்று மாலை 7 மணியளவில் நடத்த தீர்மானிக்கபட்டிருந்த்து. இதில் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் உறையாற்றுவதாக அறிவிக்கபட்டிருந்தது.

வாழ்வாதாரம் வேண்டி SDPI கட்சியினரின் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

Posted On :Thursday August 08, 2013

Image
நெல்லை மேற்கு: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள கழுநீர்குளம் பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தில் தேவர் சமூகத்தை சார்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து பிரச்சனை செய்தனர். மேலும் அவர்கள் அங்கிருந்த முஸ்லிம் பெண்களிடம் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி சில பொருட்களை தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது.

SDPI கட்சியின் சார்பில் கடையல்லூரில் மாபெரும் பேரணி

Posted On :Saturday July 06, 2013

Image
நெல்லை மேற்கு: SDPI கட்சியின் 5-ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கடையநல்லூரில் மாபெரும் பேரணி,பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று(5.7.2013) நடைபெற்றது.

நெல்லை மேற்கில் நடைபெற்ற ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Sunday June 09, 2013

Image
நெல்லை மேற்கு மாவட்டத்தில் தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) நிகழ்ச்சி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தென்காசி, காட்டு பாவா நடுநிலை பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தென்காசி நகர தலைவர் P. முகம்மது தாரிக் அவர்கள் தலைமை தாங்கினார். திவான் ஒலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நெல்லை மேற்கில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு, தென்காசியில் தாலுகா அலுவலகம் முன்பு 26-04-13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.

கடையநல்லூரில் “மதரஸா செல்வோம்” விழிப்புணர்வு பிரச்சார பேரணி:

Posted On :Monday March 18, 2013

Image
மார்ச்16 அன்று கடையநல்லூரில் மதினா நகர் மற்றும் பேட்டை பகுதிகளில் மார்க்க கல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு வலியுறுத்தும் விதமாக சிறார்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவண்ணம் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர சபை உறுப்பினரும் SDPI – ன் மாவட்ட பொருளாளருமான நைனா முஹம்மது (எ) கனி முன்னிலை வகித்தார். பேரணியை மதினா நகர் ஜமாஅத் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நெல்லை மேற்கு மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட்[NWF] நடத்திய கருத்தரங்கம்:

Posted On :Tuesday March 12, 2013

Image
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச்-8ல் “பெண்களின் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு” என்ற முழக்கத்தோடு நாடுமுழுவதும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பொதுக்கூட்டம், பேரணி, கருத்தரங்கம், மற்றும் கட்டுரைபோட்டிகள் நடந்தன.அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்டத்தில் “நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட்” சார்பாக மார்ச் 10,2013 அன்று கடையநல்லூர் பேட்டை காதர் மைதின் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம்

Posted On :Thursday February 28, 2013

Image
நெல்லை மேற்கு : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பட்டுத்துறை சார்பாக 24.02.2013 தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை, மதினாநகர் மற்றும் கிழக்கு பகுதி இக்பால் நகர், இரசாலியாபுரம் தெரு மற்றும் பரசுராமபுரம் தெரு ஆகிய இடங்களில் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – நெல்லை மேற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Thursday February 21, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மிகச்சிறப்பாக கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடையநல்லூரில் மலம்பேட்டை ரோடு-பேட்டை, இக்பால்நகர்,மணிக்கூண்டு ஆகிய 3 இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – கடையநல்லூரில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்

Posted On :Monday December 10, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் 06.12.2012 அன்று A.K.N மஹாலில் வைத்து சரியாக மாலை 06.45 மணியளவில் \”பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை\” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் K.A.லுக்மான் ஹக்கீம் B.A.,B.L., தலைமை தாங்கினார் . பாப்புலர் ப்ரண்டின் நகர செயலாளர் S.முகம்மது கனி வரவேற்ப்புரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? – புளியங்குடியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம்

Posted On :Monday October 15, 2012

Image
நெல்லை மேற்கு மாவட்டத்தின் சார்பாக புளியங்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? துவக்க நாள் பிரச்சார பொதுக்க்கூட்டம் 14 .10 .2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 6.45 மணியளவில் நடை பெற்றது. இப்பொதுக்கூட்டத்திர்க்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புளியங்குடி நகர தலைவர் ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மத் பக்ருத்தீன், தேனீ ஆண்கள் அறிவகம் முதல்வர் மஹபூப் அன்சாரி பைஜி மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். முஹம்மது அலி ஜின்னா நன்றியுரையாற்றினார்.

கடையநல்லூரில் அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday September 16, 2012

Image
உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மகாணத்தில் வசிக்கும் யுத இனத்தைச் சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட இயக்குனரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற கிருஸ்தவ போதகரும் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

சட்டப்படி பிணையில் விடு!அப்பாவிகளை விடுதலை செய்!!கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On :Sunday September 16, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

நெல்லை மேற்கு மாவட்டம் – சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி:

Posted On :Thursday August 16, 2012

Image
நெல்லை மேற்கு : சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த வருடம் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொழயேற்றுப்படுகின்றன.அதனடிப்படையில் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக செங்கோட்டையில் வைத்து சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் அவர்கள் தலைமை தாங்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் நிஜாம்முகைதீன் அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள். இதில் செங்கோட்டை 21வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது சாகுல் ஹமீது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகரத்தலைவர் ஜாபர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

சங்கரன் கோவில்: கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! முஸ்லிம்- தலித் ஒற்றுமையை பலப்படுத்த இரு தரப்பு தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் வேண்டுகோள்!

Posted On :Wednesday February 08, 2012

Image
நெல்லை மாவட்டத்தில் (மேற்கு) சங்கரன்கோவில் கழுகுமலை ரோட்டில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். நட்புணர்வோடும், சுமூகமாகவும் வாழ்ந்து வரும் இவர்கள் மத்தியில் பகையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சில சமூக விரோத விஷமிகள் சமீபகாலமாக பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்

கடையநல்லூரில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி

Posted On :Thursday June 16, 2011

Image
பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியாவின் ஸ்கூல் சலோ திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி செல்லும் மழலையர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் ஜூன் 15 அன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் புதிதாக பள்ளி செல்லும் குழந்தைகள் நல்ல முறையில் கல்வி கற்க சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும்விதமாக இனிப்புகள் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது .