Breaking News

Districts News

14469581_1170876652990998_3272650506204793054_n

“வெறுப்பு அரசியலை நிறுத்து” – காரைக்காலில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hate) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 3

0 comments

காரைக்காலில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான மாபெரும் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 06, 1992 அன்று 465 ஆண்டுகளாக தலைநிமிர்ந்து நின்ற வரலாற்று சின்னமான பாபரி மஸ்ஜிதை பாசிஸ பயங்கரவாதிகள் பட்டபகலில் இடித்து தரைமட்டமாக்கினர். இடிக்கப்பட்டது ஓர் வழிப்பாட்டு தளம் மட்டுமல்ல, நம் தேசம் கட்டமைக்கப்பட்ட மத சார்பற்ற கொள்கையும் அதன் மதிப்புகளும் சேர்ந்தே இடிக்கப்பட்டது. இந்துத்துவ சக்திகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டு அல்லது மீறி பழமையான மஸ்ஜிதை இடித்து தள்ளினார்கள். மத்திய அரசும் மாநில அரசும் தங்களை பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் ஈதுல் ஃபித்ர் தினத்தன்று ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

Posted On :Tuesday July 29, 2014

Image
பயங்கரவாத இஸ்ரேலினால் இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் காஸா மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற முழக்கத்தை ஈதுல் ஃபித்ர் தினத்தன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் முன்மொழிந்தது. இதன் ஒர் பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காரைக்கால் மாவட்டம் சார்பாக ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு பின்பு “இஸ்ரேல் வீழும்! ஃபலஸ்தீன் எழுச்சி பெறும்!!” என்ற துண்டு பிரசுரமும் நான் காஸா என்ற ஸ்டிக்கரும் விநியோகித்து பலஸ்தீனில் போராடும் மக்கள் வெற்றி பெற பிராா்த்தனை செய்யுமாறு பொது மக்களை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சி!

Posted On : Monday February 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள்மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

புதுவையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Saturday February 15, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

காரைக்கால் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Friday January 17, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

காரைக்காலில் பாப்புலர் ஃபிரண்ட் நடத்திய சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!

Posted On :Sunday September 22, 2013

Image
காரைக்காலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (22-09-2013) அன்று மஸ்தான் பள்ளி வீதி, காதர் சுல்தான் வீதி சந்திப்பில் சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

காரைக்காலில் முஸாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிப்பு!

Posted On :Wednesday September 25, 2013

Image
உத்திரப்பிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி நடைபெற்ற கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 70,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காரைக்கால் காவல்துறை மீது புதுவை அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் – பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலப் பொருளாளர் வலியுறுத்தல்

Posted On :Wednesday September 04, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா-வின் சார்பாக கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் பொதுக்கூட்டம் மற்றும் மூவண்ண தேசிய கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. தமிழகத்தில் சுதந்திரதின பொதுக்கூட்டம் நடத்த தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது மட்டும்மில்லாமல் தலைவர்களையும்,தொண்டர்களையும், மற்றும் பொதுமக்களையும் கைது செய்தது. அதனை கண்டித்து அனுமதி மறுத்த தமிழக காவல்துறை கண்டித்து 16.08.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் தீர்மானிக்கப்பட்டது.

காரைக்கால் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புதுவை முதல்வரை சந்திக்க வேண்டும் – மாவட்ட செயற்குழு முடிவு

Posted On : Tuesday September 03, 2013

Image
காரைக்கால் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் காரைக்கால் மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் சிக்கந்தர் பாஷா தலைமையில் 02.09.2013 அன்று நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் முஹம்மது ரசீன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டார்கள். செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காரைக்காலில் தடையை மீறி பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்! காவல்துறையினர் வன்முறை!

Posted On : Thursday August 22, 2013

Image
காரைக்கால்: சுதந்திர உணர்வையும், சுதந்திர போராட்டத் தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் மற்றும் தேசத்திற்கான நமது கடமையை உணர்த்தும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தன்று “வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து “ஃப்ரீடம் மீட்” என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

புதுவை ஆளுனரை சந்தித்த பாப்புலர் ஃப்ரண்ட் காரைக்கால் மாவட்ட தலைவர்!

Posted On :Sunday July 21, 2013

Image
காரைக்கால்: 20.07.2013 அன்று காரைக்கால் வருகை தந்த துணை நிலை ஆளுனர் வீரேந்திர கட்டாரிய அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா -வின் சார்பாக மாவட்ட தலைவர் சிக்கந்தர் பாஷா அவர்கள் சந்தித்து இயக்க பணிகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வழங்கினர்.

பா.ஜ.க வின் வன்முறையாட்டம்: நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரி டி.ஐ.ஜி யிடம் புகார்!

Posted On : Thursday July 25, 2013

Image
காரைக்கால்: பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஸ் கொல்லப்பட்டதை தொடர்ந்து பா.ஜ,க நடத்திய பந்தில் பா.ஜ.க.வினர் வன்முறையில் ஈடுபட்டனர் மேலும் பல இடங்களில் கலவரம் உருவாக்க முயன்றுள்ளனர். தமிழகம் முழுவதும் நடந்த இந்த வன்முறைடாட்டத்தில் பல அரசு பேருந்துகள் கல் வீசி தாக்கப்பட்டு பயணிகள் காயமுற்ற சம்பவங்களும், பல்வேறு தொழில் நிறுவனங்கள் மீது தாக்குதல்களும் நடந்துள்ளன. குறிப்பாக முஸ்லிம் நிறுவனங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களும் நடந்து வருகின்றன.

காவல்துறை காண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும: இஸ்லாமிய கூட்டமைப்பினர்!

Posted On : Tuesday July 23, 2013

Image
காரைக்கால்: சேலத்தில் பா.ஜ.க வின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 22.07.2013 அன்று தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. பா.ஜ.க நடத்திய இந்த பந்த் தமிழக அளவில் மக்களின் ஆதரவு இல்லாமல் தோல்வியை தழுவினாலும் சில இடங்களின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது உட்பட பல வன்முறை செயல்களில் பா.ஜ.கவினர் ஈடுபட்டனர். இந்நிலையில் காரைகாலில் பா.ஜ.கவினர் மதக்கலவத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடசாமியிடம் புகார் அளித்தபோது, முஸ்லிம்களின் புகார்களை ஏற்காமல் முஸ்லிம்களை குண்டுவைப்பவர்கள் என்றும், தீவிரவாதிகள் என்றும் கூறியுள்ளார்.

காரைக்காலில் நடைபெற்ற ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On : Monday June 24, 2013

Image
காரைக்கால் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் M.E.S உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை காரைக்கால் பெரியப் பள்ளி இமாம் ஹாஜா மொய்னுதீன் அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.

காரைக்காலில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 26-04-13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் காரைக்கால் மாவட்ட தலைவர் பாஷா தலைமை தாங்கினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Tuesday February 19, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது .அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்காலில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்

Posted On :Saturday February 02, 2013

Image
காரைக்கால் : காரைக்காலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலக திறப்பு விழா 30.01.2013 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது . காரைக்கால் மாவட்ட தலைவர் M . சிக்கந்தர் பாஷா கொடி ஏற்றினார். பெரியப் பள்ளி இமாம் ஹாஜா மொய்னுதீன் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார்கள் .

பாப்புலர் ஃப்ரண்ட் உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் வைத்த கோரிக்கையின் எதிரொலி பாண்டிச்சேரியிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை

Posted On : Friday January 25, 2013

Image
பாண்டிச்சேரி : பாண்டிச்சேரியில் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கமிஷனர் , டி.ஜி.பி மற்றும் முதல்வரை சந்தித்து பேசினர் . அது போல் காரைக்காலிலும் மாவட்ட ஆட்சிரிடம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – காரைக்காலில் நடைபெற்ற நோட்டீஸ் பிரச்சாரம்

Posted On :Friday December 14, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் \”பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை\” என்ற தலைப்பிட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது .

காரைக்கால் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மறியல் போராட்டம்.

Posted On :Monday February 13, 2012

Image
காரைக்கால் அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தனப் போக்கால் 13.02.2012 அன்று காலை நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் மரணமடைந்தார். காரைக்கால் அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தனம் மற்றும் நோயாளிகளிடம் காட்டும் மனிதாபிமானற்ற போக்கு ஆகியவற்றின் காரணமாக பொது மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

காரைகாலில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Posted On : Monday May 23, 2011

Image
இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம்