Breaking News

Districts News

Posts not found

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

பூதமங்கலத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்!

Posted On :Saturday January 17, 2015

Image
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக மனித நேயத்தின் மாநபி முஹம்மது (ஸல்) பிரியமான நபி என்ற தலைப்பில் 17-01-2015 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு கூத்தாநல்லூர் இமாம் ரஷிதியியா பள்ளிவாசல் இமாம் மௌலவி சிக்கந்தர் பாதுஷா உலவி அவர்கள் தலைமை தாங்கினார்.

திருவாரூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இளையதலைமுறைக்கான பேச்சுப்போட்டி!

Posted On :Sunday January 04, 2015

Image
திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்க்கையின் முழுவழிக்காட்டி என்ற தலைப்பில் ஜனவரி 2 ,3 – 2015 ஆகிய தினங்களில் இளையதலைமுறைக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் அத்திக்கடை கிளை செயலாளர் சகோ.செய்யது உமர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் கூத்தாநல்லூர் நகர செயற்குழு உறுப்பினர் சகோ.தமீம் அன்சாரி அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். முகையிதீன் நூரி ஹஜ்ரத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக அத்திக்கடை கிளை தலைவர் சகோ. முஹம்மது அலி அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

திருவாரூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பாபரி மஸ்ஜித் விழிப்புனர்வு பொதுகூட்டம்!

Posted On :Thursday December 04, 2014

Image
திருவாரூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பாபரி மஸ்ஜித் இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பாபரி மஸ்ஜித் விழிப்புனர்வு பொதுகூட்டம் பொதக்குடியில் 3/12/14 அன்று மாலை 6.15 மணிக்கு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!

Posted On :Monday November 17, 2014

Image
ஒரு நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தால் நாடு வலிமையாக இருக்கும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்” என்ற பிரச்சாரத்தை ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் செய்து வருகின்றது.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஜமாத்தார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

Posted On :Sunday September 14, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூகங்களுக்கிடையில், சமுதாயங்களுக்கிடையில் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தும் வண்ணமாக பல்வேறு நிகழ்ச்சிகளை தேசம் முழுவதும் நடத்தி வருகின்றது.

திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற அபுல் கலாம் ஆஸாத் கல்வி உதவித் தொகை பூர்த்தி செய்யும் முகாம்!

Posted On :Sunday August 03, 2014

Image
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திர போராட்ட வீரருமான மெளலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களை கவுரவிக்கும் வண்ணம், சிறுபான்மையின பெண்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் +1 மாணவிகளுக்கு “அபுல் கலாம் ஆஸாத் கல்வி உதவித்தொகையை” காங்கிரஸ் அரசு அமல்படுத்தி ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பயனாளிகளிடமிருந்து பெறப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் மாத இஸ்லாமிய கேள்வி பதில் மற்றும் கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா !

Posted On :Friday August 01, 2014

Image
திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அடியக்கமங்கலம் கிளை சார்பக ரமலான் மாத இஸ்லாமிய கேள்வி பதில் மற்றும் கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி 01-08-2014 அன்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ஃபித்ரா விநியோகம்!

Posted On :Wednesday August 06, 2014

Image
பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

பாலஸ்தீனிய குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday July 12, 2014

Image
உலக பயங்கரவாத நாடான இஸ்ரேல் கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது. சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும்.

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் அக்சஸ் இந்தியா மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி, இணைந்து நடத்திய தன்னம்பிக்கை வழிகாட்டி முகாம்!

Posted On :Saturday November 30, 2013

Image
10th, +1 & +2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அவர்களின் எதிர்கால வாழ்வில் ஒளியை ஏற்படுத்த தன்னம்பிக்கை வழிகாட்டி முகாம் திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 29.11.2013 வெள்ளி மாலை 3.00 மணிக்கு பள்ளி வளாக திடலில் நடைபெற்றது.

மதுக்கூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெங்கு விழிப்புணர்வு மற்றும் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Monday November 25, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரசாரம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. திருச்சியில் பல்வேறு பகுதிகளில் சைக்கிள் பேரணி,யோகா பயிற்சி,மருத்துவ முகாம்களும் நடைபெற்றது.

கூத்தாநல்லூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர அலுவலகம் திறப்பு விழா!

Posted On :Saturday September 28, 2013

Image
தேசிய அளவில் செயல்பட்டு கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் புதிய நகர அலுவலகம் கூத்தாநல்லூர்-ல் 27-09-2013 அன்று சிறப்பாக திறக்கப்பட்டது.

திருவாரூர் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய மருத்துவ உதவி!

Posted On :Tuesday August 13, 2013

Image
திருவாரூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ஏழை மற்றும் பாமர மக்களுக்கு மருத்துவம், கல்வி உட்பட பல்வேறு தொண்டுகள் நடந்து வருகிறது.

முத்துப்பேட்டையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Friday July 05, 2013

Image
திருவாரூர்: முத்துப்பேட்டையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வலியுறுத்தியும், பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலரை (E.O) பணி அமர்த்த கோரியும், குப்பைகளை அகற்றாமல் தொடரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யாததை கண்டித்தும், SDPI கட்சி சார்பாக நேற்று (04/07/13) காலை 10.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்:

Posted On :Sunday June 16, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக திருவாரூர் மாவட்டம் கொடிக்கால் பாளையத்தில் J.M தெரு, வடக்குத்தெரு சந்திப்பில் புனித ரமலானை வரவேற்போம் என்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது

திருவாரூரில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் கூட்டுறவு தலைமை அலுவலகம் முன்பு 26-04-13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பேச்சாளர் அபூபக்கர் சித்தீக் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.

முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்

Posted On :Tuesday February 05, 2013

Image
திருவாரூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் 03.02.2013 அன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.இம்முகாமில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் . அனைவருக்கும் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது . மேலும் அனைவருக்கும் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த இலவச ஏடும் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் அறிவகம் தஃவா குழு

Posted On :Sunday January 27, 2013

Image
திருவாரூர் : முஸ்லிம் சமூகம் செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளில் ஒன்றான இஸ்லாத்தை ஏனைய சமூக மக்களுக்கு எடுத்து சொல்லிடும் அழகியதொரு தஃவா பணியை தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பல்வேறு நிலைகளில் அறிவகம் தஃவா குழு சார்பாக கடந்த பல வருடங்களாக செய்துவருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திருவாரூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday January 26, 2013

Image
திருவாரூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திருவாரூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் முழு வழிகாட்டி – பொதக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் பேச்சுப்போட்டி மற்றும் பொதுக்கூட்டம்

Posted On :Thursday January 17, 2013

Image
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் முழு வழிகாட்டி எனும் தலைப்பில் மாபெரும் பேச்சுப்போட்டி மற்றும் பொதுக்கூட்டம் ஜனவரி 13,2013 அன்று மாவட்ட தலைவர் A.அபு பக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்றது.

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து திருவாரூரில் பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Tuesday November 20, 2012

Image
காஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் பஸ் நிலையத்திற்கு எதிரில் 19.11.2012 அன்று மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் திருவாரூர் மாவட்ட தலைவர் லத்தீப் தலைமை தாங்கி வரவேற்பு உரையாற்றினார் . பாப்புலர் ஃப்ரண்ட் பேச்சாளர் அஜ்மல் கண்டன உரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விலாயத் ஹுசைன் நன்றியுரையாற்றினார்

பாப்புலர் ப்ரண்ட் ஏன் ? திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரங்கள்

Posted On :Friday November 02, 2012

Image
திருவாரூர் மாவட்டத்தில் அடியக்க மங்களம் , புலிவலம் , கொடிக்கால் பாளையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. வாகனப் பிரச்சாரத்தில் அனைத்து மக்களுக்கும் வீடு வீடாக சென்று \”பாப்புலர் ப்ரண்ட் ஏன் ?\” எனும் தலைப்பிட்ட நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் – சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி

Posted On :Sunday August 19, 2012

Image
கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் சார்பாக திருவாரூர் நகரம், புலிவலம், அடியக்கமங்கலம் ஆகிய மூன்று இடங்களில் சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.