Breaking News

Districts News

Posts not found

கிருஷ்ணகிரியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான கருத்தரங்கம்!

Posted On :Saturday December 06, 2014

Image
1992 டிசம்பர் 6 – 450 ஆண்டுகால பாபரி மஸ்ஜிதை வகுப்புவாத சிந்தனை கொண்ட சங்பரிவார கும்பல் இடித்து தரை மட்டமாக்கிய நாள். இந்தியாவின் இறையாண்மையான மதசார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சோஷியலிசம் சிறுபான்மையினரின் உரிமை, சகிப்புத்தன்மை போன்ற விழுமியங்கள் ஆழ குழிதோண்டி புதைக்கப்பட்டது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நீதி என்பது எட்டா கனியாகவே உள்ளது. அதே சமயம் செப் 30, 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தன் பங்குக்கு சட்ட முரணான அடிப்படையில் தீர்ப்பு வழங்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனையான விஷயம்.

பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On : Friday September 19, 2014

Image
பா.ஜ.க MP மற்றும் அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பா.ஜ.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பா.ஜ.கவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட UAPA – எதிர்ப்பு மக்கள் இயக்கம் நடத்திய UAPA – சட்டத்திற்கு எதிராக சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

Posted On :Wednesday March 05, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Monday February 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு!

Posted On :Saturday December 07, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பாக பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு நிகழ்ச்சி நேற்று (06.12.2013) நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஃபித்ரா விநியோகம்!

Posted On :Posted on Friday August 09, 2013

Image
கிருஷ்ணகிரி: பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற

கிருஷ்ணகிரியில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 26-04-13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் கலீம் தலைமை தாங்கினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Tuesday March 05, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – கிருஷ்ணகிரி ஓசூரில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்

Posted On :Saturday December 08, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 06.12.2012 அன்று மாலை 6.30 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சீதா லட்சுமி மஹாலில் வைத்து . நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் B.அப்துல் கலீம் தலைமை தாங்கினார் . ஐக்கிய முற்போக்கு திராவிட கழகத்தின் டாக்டர் .A.R.சண்முகம் வழக்கறிஞர் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் நகர செயலாளர் M.M.ராமச்சந்திரன் , SDPI கட்சியின் மாவட்ட தலைவர் தஹூருல்லா மற்றும் SDPI கட்சியின் மாவட்ட பொது செயலாளர் ஷாநவாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள் .

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! ஓசூரில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On :Sunday September 16, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.