Breaking News

Districts News

13767280_880709545406167_4154378987587338138_o

மதவாத பா.ஜ.க. அரசை கண்டித்து வேலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

டாக்டர்.ஜாகீர் நாயக் மற்றும் அசதுதீன் உவைசி ஆகியோர் மீது அவதூறு பரப்பும் மதவாத பா.ஜ.க அரசை கண்டித்து 15.07.2016 அன்று வேலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்

0 comments

வேலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற சர்வ சிக்ஷா கிராம் (முழுமையான கிராமம்) துவக்க விழா!

Posted On :Wednesday November 04, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் “பள்ளி செல்வோம்” என்ற தொடர் பிரச்சாரத்தை கடந்த 5 வருடங்களாக செய்து வருகிறது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கிராம கணக்கெடுப்பு, பள்ளியில் இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் மீண்டும் சேர்த்தல், பெற்றோர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் முகாம், கல்வி விழிப்புணர்வு பேரணி, மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவது என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக வேலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Friday September 19, 2014

Image
பா.ஜ.க MP மற்றும் அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பா.ஜ.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பா.ஜ.கவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

வேலூர் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Sunday July 20, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, வட்டியில்லா சிறு தொழில் கடனுதவி, குடிநீர் விநியோக திட்டம், இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள், நிவாரண உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.

ஆம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Sunday June 08, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது.

வேலூரில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Monday February 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

வேலூர் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On :Friday February 14, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆம்பூர் நகர புதிய அலுவலக திறப்புவிழா!

Posted On :Friday February 14, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய அலுவலக திறப்புவிழா நிகழ்ச்சி 14-02-2014 இன்று ஆம்பூர் நகரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆம்பூர் நகர புதிய அலுவலகத்தை பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் M. முஹம்மது ஷேக் அன்சாரி அவர்கள் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Friday January 17, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து வேலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 17, 2013

Image
வேலூர்: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது.

வேலூரில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
Sunday April 28, 2013வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக வேலூர் போஸ்ட் ஆபிஸ் முன்பு 26-04-13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் வேலூர் மாவட்ட தலைவர் பாயாஸ் அஹமது தலைமை தாங்கினார்.

வேலூர் மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட்[NWF] நடத்திய கருத்தரங்கம்:

Posted On :Thursday March 14, 2013

Image
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச்-8ல் “பெண்களின் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு” என்ற முழக்கத்தோடு நாடுமுழுவதும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பொதுக்கூட்டம், பேரணி, கருத்தரங்கம், மற்றும் கட்டுரைபோட்டிகள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக மார்ச் 08,2013 அன்று வேலூர் RN பாளையத்தில் உள்ள RKமஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது.

வேலூரில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டம்

Posted On :Friday February 15, 2013

Image
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக உயிரினும் மேலான உத்தம நபி [ஹுப்புன்னபி] எனும் பெயரில் தமிழகமெங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக வேலூரில் கடந்த 15.02.2013 அன்று மாலை 6.45 மணி அளவில் கஸ்பா ஆட்டோ ஸ்டாண்டு அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வேலூர் மாவட்ட செயலாளர் மௌலவி அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொருளாளர் மவ்லவி அப்துல் கபூர் மன்பஈ மற்றும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மவ்லவி சம்சுல் ஹுதா பாக்கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Tuesday February 19, 2013

Image
வேலூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் தாம்பரம், திருச்சி மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆம்பூரில் உள்துறை அமைச்சரின் கருத்தை ஆதரித்தும் , ஆர்.எஸ்.எஸ். பாஜக வை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Monday February 04, 2013

Image
வேலூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 03.02.2013 அன்று உள்துறை அமைச்சரின் கருத்தை ஆதரித்தும்.ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க வை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தை தடை செய்து 40க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினரை காவல்துறை கைது செய்தனர் . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் கைது செய்யப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினரை மாலை 6.30 மணியளவில் காவல்துறை விடுவித்தது.

வேலூரில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது

Posted On :Saturday February 02, 2013

Image
வேலூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக வேலூரில் மாணவரின் கல்வி செலவிற்காக ரூ5,000/- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது .

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – வேலூர் ஆம்பூரில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்

Posted On :Friday December 14, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 06.12.2012 அன்று மலை 6.30 மணியளவில் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள சுல்தான ஷாதி மஹாலில் வைத்து கருத்தரங்கம் நடைபெற்றது . இக்கருத்தரங்கிற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் வேலூர் மாவட்ட தலைவர் பையாஸ் அஹமது தலைமை தாங்கினார் . மாவட்ட செயலாளர் ஷப்பீர் அஹமது முன்னிலை வகித்தார் . பாப்புலர் ப்ரண்டின் ஹபீஸூர் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார் . SDPI கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் சாதிக் (ஊராட்சி மன்ற உறுப்பினர் , நரியம்பட்டு) , பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் அமைப்பாளர் வழக்கறிஞர் மார்த்தாண்டன் மற்றும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் வேலூர் மாவட்ட செயலாளர் ஹாபீஸ் மௌலவி அப்துர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள் .

பாப்புலர் ப்ரண்ட் ஏன் ? கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரங்கள்

Posted On :Thursday November 01, 2012

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றது.இதில் நோட்டீஸ் பிரச்சாரம், வாகனப் பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெறுகிறது.அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. வாகனப் பிரச்சாரத்தில் அனைத்து மக்களுக்கும் வீடு வீடாக சென்று \”பாப்புலர் ப்ரண்ட் ஏன் ?\” எனும் தலைப்பிட்ட நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! கடலூரில் தடையை மீறி பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On :Monday September 17, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்! கடலூர் மாவட்டத்தில் நடந்த தெருமுனை கூட்டம்…

Posted On :Monday September 03, 2012

Image
நாட்டில் சிறுபான்மை சமூக அப்பாவி இளைஞர்களை குறிவைத்து கைது செய்வதும் அவர்களை நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதனை மக்கள் மன்றத்தில் வைக்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது.