Breaking News

Districts News

trichy

வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை மண்டல தலைவர் ஆறுதல்

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்து உள்ள முருங்கபட்டி கிராமத்தில் இன்று (01-12-2016) காலை ஏழு மணியளவில் வெற்றிவேல் எக்ஸ்ப்ளோஸிவ் என்ற வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கோர விபத்து

0 comments
DSC02393

திருச்சியில் நடைபெற்ற சிறுபான்மை மாணவ / மாணவிகளுக்கு உயர்கல்விக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2011 அறிக்கையானது சிறுபான்மை முஸ்லிம் சமூகம் தேசிய அளவில் பின்தங்கியுள்ள நிலையை படம்பிடித்து காட்டுகிறது. பிற சிறுபான்மை சமூகங்கள் முக்கிய

0 comments
Trichy (3)

திருச்சியில் பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) & நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) & நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இணைந்து மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு கண்டன

0 comments
14495452_1171934332885230_2752820749589379034_n

“வெறுப்பு அரசியலை நிறுத்து” – திருச்சியில் தடையை மீறி எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hate) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 03

0 comments
13734997_1190326121020153_177468277853735796_o

மதவாத பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

டாக்டர்.ஜாகீர் நாயக் மற்றும் அசதுதீன் உவைசி ஆகியோர் மீது அவதூறு பரப்பும் மதவாத பா.ஜ.க அரசை கண்டித்து 14.07.2016 அன்று திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்

0 comments

திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக காட்டுமிராண்டித்தனத்திற்கெதிராக எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Tuesday October 13, 2015

Image
“உண்பது எனது உரிமை! பேசுவது எனது உரிமை!!” என்ற முழக்கத்தோடு அக்டோபர் 09 முதல் 18 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்திய தேசம் முழுவதும் காட்டுமிராண்டிதனத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் 13-10-2015 அன்று மாலை சரியாக 5:15 மணியளவில் அண்ணாசிலை (மேலசிந்தாமணி அருகில்) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் உதவி வழங்கும் முகாம்!

Posted On :Monday September 21, 2015

Image
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையும், சச்சார கமிஷன் அறிக்கையும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக சூழல் மிகவும் பின்தங்கியுள்ளதாக வேதனையுடன் சமர்பித்தார்கள். பா.ஜ.க அரசால் சச்சார் கமிட்டியின் அறிக்கையை மதிப்பாய்வு செய்வதற்கு நியமிக்கபட்ட போராசிரியர். அமிதாப் குண்டு தலைமையில் கமிட்டி தனது அறிக்கையை கடந்த ஆண்டு செப்டம்பர் 29ல் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அவர்களிடம் சமர்பித்தது.

திருச்சி தெற்கு டிவிஷன் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மக்கள் சங்கமம் மாநாடு மற்றும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி!

Posted On :Sunday May 03, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா சார்பாக “சங்கமிப்போம் சக்திபெறுவோம்” என்ற முழக்கத்தோடு மக்கள் சங்கமம் மாநாடு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு டிவிஷன் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மக்கள் சங்கமம் மாநாடு மற்றும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி 03-05-2015 அன்று நடைபெற்றது.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Saturday February 28, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொருளாதார சூழல் மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்ய பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தமிழகம் முழுவதிலும் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யபட்டு உயர்கல்விக்கான உதவித்தொகைகள் வழங்கபட்டு வருகின்றன.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி!

Posted On :Monday January 26, 2015

Image
66 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் காலை 10 மணியளவில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் V.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் A.முஹம்மது சித்திக் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் s.s.ரஹ்மத்துல்லா, SDTU மாவட்ட தலைவர் சிராஜுதீன் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட பொதுச் செயலாளர் அஹமது மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

திருச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற சகோதரத்துவ மாநாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் பங்கேற்பு!

Posted On :Sunday December 21, 2014

Image
அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் நடத்திய சகோதரத்துவ மாநாட்டின் இறுதி நாளான 21.12.2014 அன்று சரியாக மாலை 4.30 மணி அளவில் நிறைவு நாள் பொதுக்கூட்டம், மால்கம் – X திடலில் (இஸ்லாம் ஓர் பரிபூரண வாழ்க்கைத் திட்டம்) என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்டது. இம்மாநாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் (TNDFT Managing Trustee) அவர்கள் தலைமை தாங்கினார்.

திருச்சியில் நடைபெற்ற இஸ்லாமிய கண்காட்சி திறப்புவிழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில் பங்கேற்பு !

Posted On :Friday December 19, 2014

Image
அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் சார்பாக சகோதரத்துவ மாநாடு திருச்சியில் 19,20,21 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் ஒரு பகுதியாக இஸ்லாமிய கண்காட்சி திறப்புவிழா இன்று 19.12.2014 திருச்சி L.K.S அரிஸ்டோ மஹாலில் காலை 11.00 மணி அளவில் நடைபெற்றது.

அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் நடத்தும் சகோதரத்துவ மாநாடு நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை காண கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்யவும

Posted On : Friday December 19, 2014

Image
அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் நடத்தும் சகோதரத்துவ மாநாடு நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை காண கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.

புத்தாநத்தத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடக்கிறது. அதன் அடிப்படையில் திருச்சியில் இன்று காலை சரியாக 10:30 மணிக்கு ராமகிருஷ்ணா பாலம் அருகில் “நீதிக்கான ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிவின் சார்பாக நடைபெற்ற இலவச குடிநீர் திட்டம் – 2014 திறப்புவிழா நிகழ்ச்சி!

Posted On :Sunday November 30, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிவின் சார்பாக இலவச குடிநீர் திட்டம் – 2014 திறப்புவிழா நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் பலக்கால்பட்டி யில் 29/11/2014 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிவின் திருச்சி மாவட்ட செயலாளர் A. முகம்மது சித்திக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற மராத்தான் ஓட்டம்!

Posted On :Sunday October 12, 2014

Image
நாட்டு மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்பற்ற நிலையிலும், அடிப்படை சுகாதாரம் பற்றிய அக்கறை இல்லா நிலையிலும் அரசுத்துறைகளும், அதிகாரிகளும் இருந்து கொண்டிருக்கும் இச்சூழலில் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னையும் வளப்படுத்தி, பலப்படுத்தி பாதுகாத்திடவும், அதன் மூலம் சமூகத்தையும், தேசத்தையும், பாதுகாத்திடவும் சிந்தனைகளை ஏற்படுத்திட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் தேசம் தழுவிய அளவிலே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மராத்தான் ஓட்டம் – நேரடி ஒளிபரப்பு!

Posted On :Saturday October 11, 2014

Image
திருச்சியில் ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் நாளை (12-10-2014) காலை 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் திறை சார்பாக குடிநீர் வழங்கும் திட்டம்!

Posted On :Saturday September 27, 2014

Image
திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மணப்பாறை தாலுக்காவில் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டிருந்த மக்களுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத்துறையின் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் அங்குள்ள மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், அடிப்படை அத்தியாவசிய தேவைகளின் ஒன்றான குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் போர் மூலம் விசை இயக்க குழாய் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இது மூலம் நீண்ட நாள் நிலவி வந்த தண்ணீர் பற்றாக் குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்டம் பொறுப்பாளர்கள் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அமெரிக்கன் ஆப்டிகல்ஸ் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்!

Posted On :Friday August 15, 2014

Image
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் “அமெரிக்கன் ஆப்டிகல்ஸ்” இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (15-08-2014) நடைபெற்றது.

திருச்சியில் ஈதுல் ஃபித்ர் தினத்தன்று ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

Posted On :Tuesday July 29, 2014

Image
பயங்கரவாத இஸ்ரேலினால் இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் காஸா மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்ற முழக்கத்தை ஈதுல் ஃபித்ர் தினத்தன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் முன்மொழிந்தது. இதன் ஒர் பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் சார்பாக ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு பின்பு “இஸ்ரேல் வீழும்! ஃபலஸ்தீன் எழுச்சி பெறும்!!” என்ற துண்டு பிரசுரமும் நான் காஸா என்ற ஸ்டிக்கரும் விநியோகித்து பலஸ்தீனில் போராடும் மக்கள் வெற்றி பெற பிராா்த்தனை செய்யுமாறு பொது மக்களை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

திருச்சி மாவட்ட ஏர்போர்ட் பகுதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ஃபித்ரா விநியோகம்!

Posted On :Monday July 28, 2014

Image
பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Wednesday July 16, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, வட்டியில்லா சிறு தொழில் கடனுதவி, குடிநீர் விநியோக திட்டம், இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள், நிவாரண உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Sunday July 13, 2014

Image
வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயிற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. இந்த புனித ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும், சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு இடங்களில் ஜமாத்தார்களை ஒருங்கினைக்கும் விதமாக இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

ஃபலஸ்தீன் மீது தொடரும் இஸ்ரேலின் கொலைவெறித்தாக்குதலை கண்டித்து திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday July 12, 2014

Image
உலக பயங்கரவாத நாடான இஸ்ரேல் கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது. சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும்.

திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் சிறுபான்மையின மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகையை பெற நடைபெற்ற விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்!

Posted On :Wednesday June 25, 2014

Image
திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் அரியமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அரசின் கல்வி உதவித்தொகையை சிறுபான்மையின மாணவர்களுக்கு பெற்றுத்தரும் பொருட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம் நடைபெற்றது. இம்முகாமை திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பகுதி தலைவர் சௌகத் அலி அவர்கள் முன்னின்று வழி நடத்தினார். இம்முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டனர்.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி!

Posted On :Tuesday June 10, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி!

Posted On :Tuesday June 10, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது.

நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு.

Posted On :Friday January 17, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம்!

Posted On :Friday December 06, 2013

Image
பாபர் மசூதியினை இடித்த தினமான டிசம்பர்-06 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகம் முழுவதும் துண்டு பிரசுர விநியோகம்,பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு கருத்தரங்குகளும், பாபர் மசூதி குறித்த வரலாற்று குறும்படங்களும் மக்களுக்கு திரையிடப்பட்டன. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி பாலக்கரையில் உள்ள மீனாட்சி மஹாலில் பாபர் மசூதி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் டிசம்பர்-06 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரசாரம்

Posted On :Monday November 25, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரசாரம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. திருச்சியில் பல்வேறு பகுதிகளில் சைக்கிள் பேரணி , யோகா பயிற்சி , மருத்துவ முகாம்களும் நடைபெற்றது.

சிறை நிரப்பு பேராட்டம் ஏன்? திருச்சியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

Posted On :Tuesday October 01, 2013

Image
“அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்த இருக்கிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி கடனுதவி – 2013!

Posted On :Saturday September 28, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கும் கல்வி கடனுதவி இன்று (28-09-2013) திருச்சியில் K.M.S. மஹாலில் நடைப்பெற்றது.

நரேந்திர மோடியின் தமிழக வருகையை கண்டித்து திருச்சியில் SDPI கட்சி தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், 500 க்கும் மேற்பட்டோர் கைது!

Posted On :Thursday September 26, 2013

Image
பலஆயிரம் முஸ்லிம்களின் படுகொலைக்கும், பாலியல் வன்முறைக்கும், பலஆயிரம் கோடி முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டதற்கும் காரணம் ஆன நரேந்திர மோடி தமிழகம் வருவது பெரியார், அண்ணா பிறந்த தமிழகத்திற்கு அவமானம். எனவே மோடியின் தமிழக வருகையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மாபெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் சென்னையிலும், திருச்சியிலும் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மோடியின் திருச்சி வருகையை கண்டித்து கருப்பு கொடி மற்றும் முற்றுகை போராட்டம் ஏன்? என்று SDPI கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு!

Posted On :Tuesday September 24, 2013

Image
திருச்சி : திருச்சியில் இன்று(24-09-2013) SDPI கட்சி சார்பாக மோடியின் திருச்சி வருகையை கண்டித்து கருப்பு கொடி மற்றும் முற்றுகை போராட்டம் ஏன்? என்று SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கினார்.

மோடியின் தமிழக வருகையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி முற்றுகை போராட்டம்

Posted On :Sunday September 15, 2013

Image
குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற இனக்கலவரத்திற்கு காரணமான அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி, 26-09-2013 அன்று திருச்சியில் நடைபெறும் பாஜக மாநாட்டிற்கு வருகை தர உள்ளார். குஜராத் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற இனக்கலவரத்திற்கு காரணமான நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருவதை கண்டிக்கும் வகையில் அன்றைய தினம் கறுப்பு கொடி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்த எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவு செய்துள்ளது என அறிவித்துள்ளார்.

எகிப்து இராணுவத்தை கண்டித்து திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday August 21, 2013

Image
திருச்சி: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக திருச்சியில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Friday August 16, 2013

Image
திருச்சி: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர

திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய மருத்துவ உதவி

Posted On :Saturday July 06, 2013

Image
திருச்சி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ஏழை மற்றும் பாமர மக்களுக்கு மருத்துவம், கல்வி உட்பட பல்வேறு தொண்டுகள் நடந்து வருகிறது.

திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கல்வி உதவி தொகை விழிப்புணர்வு முகாம்

Posted On :Monday July 01, 2013

Image
திருச்சி: சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான நிதிகள் திரும்ப அனுப்பப்பட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பயனடைந்தனர்.

திருச்சியில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Monday June 17, 2013

Image
திருச்சி மாவட்டம் லால்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அமானுல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி ஜமாஅத் தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க பர்வீன் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற ஜமாத் நிர்வாகிகளுக்கான சந்திப்பு நிகழ்ச்சி

Posted On :Wednesday May 22, 2013

Image
கடந்த ஞாயிறு(19/05/13) அன்று திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ராஜா கார்டனில் திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி பாப்புலர் ஃப்ரண்ட் திருச்சி மாவட்ட தலைவர் அமீர் பாஷா தலைமையில் நடைபெற்றது.

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday April 27, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மரக்கடை இராமகிருஷ்ணா பாலம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் S.அமீர் பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஐ.சபியுல்லா வரவேற்புரையாற்றினார்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழு-புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!!!

Posted On :Monday March 11, 2013

Image
திருச்சியில் 09.03.2013 அன்று துவங்கிய எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு 10.03.2013 அன்று மாலையுடன் முடிவடைந்தது. திருச்சி எல்.கே.எஸ் மஹாலில் நடைபெற்ற இப்பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.

வி.களத்தூர் மக்கள் போராட்டம் : திருச்சியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

Posted On :Friday March 01, 2013

Image
திருச்சி : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் மற்றும் மாநில நிர்வாகிகள் 28.02.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதிக்கு சென்று அங்குள்ள ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மக்களை சந்தித்து பேசினார்கள் . பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் திருச்சியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது :

ரயில்வே பட்ஜெட்டிற்கு கண்டனம்! எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

Posted On :Thursday February 28, 2013

Image
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் 26.02.2013 அன்று காலை திருச்சி பீம நகர் கே.எம்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலசெயலாளர் நாஞ்சில் செய்யது அலி வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக், மாநில செயலாளர்கள் கே. செய்யது இபுராகிம், அபுதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இறுதியாக மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

Posted On :Monday February 18, 2013

Image
திருச்சியில் ” யூனிட்டி மார்ச் ” என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான S.P.நஸ்ருதீன் துவக்கவுரை நிகழ்த்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியானது சரியாக 3 மணியளவில் மரக்கடை ஸ்டார் தியேட்டர் அருகில் துவங்கி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலையில் நிறைவு பெற்றது .தொடர்ச்சியாக பேரணியின் முடிவில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சியை முற்றுகையிட முயற்சி-ஏராளமான எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சியினர் கைது

Posted On :Saturday February 16, 2013

Image
திருச்சி அரியமங்கலம் 29 வார்டு தீடீர் நகர்,அண்ணா நகர்ஆகிய பகுதிகளுக்கு நிரந்தர சாலை வசதி கேட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 12.02.2013 அன்று நடைபெற்றது .எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார் .இதில் அப்பகுதி பொது மக்களும், எஸ்.டி.பி.ஐ(SDPI) கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.

திருச்சியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய ” பெண்களை பாதுகாப்போம் ” விழிப்புணர்வு பிரச்சாரம்

Posted On :Tuesday February 12, 2013

Image
திருச்சி : தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக ” பெண்களை பாதுகாப்போம் ” எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது . இதில் பொதுமக்கள் அதிகம் சங்கமிக்கும் இடங்களான பஸ் ஸ்டான்ட் , ரயில்வே ஸ்டேஷன் , பள்ளி , கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் ” பெண்களை பாதுகாப்போம் ” எனும் தலைப்பிட்ட நோட்டிஸ் விநியோகம் செய்யப்படுகிறது . அதன் ஒரு அங்கமாக திருச்சி மாவட்டத்தின் காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் மற்றும் பல்வேறு பகுதிகளில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது .

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் SDPI கட்சி நடத்திய மது ஒழிப்பு பேரணி

Posted On :Saturday February 02, 2013

Image
திருச்சி : தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி ஜனவரி 30 அன்று SDPI கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பாக மாணவர்கள் பங்குபெற்ற மாபெரும் மது ஒழிப்பு பேரணி வெஸ்ட்ரி பள்ளியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது . பேரணியை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (CFI) மாநில துணை தலைவர் சாகுல் ஷஹித் துவக்கி வைத்தார் .இந்த பேரணியில் SDPI கட்சியின் மாநில செயலாளர்கள் K.S.இப்ராஹிம் மற்றும் நாஞ்சில் செய்யதலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Saturday January 26, 2013

Image
திருச்சி : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திருச்சி மரக்கடையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று காலை 11.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக திருச்சி மாவட்டத்தின்

Posted On :Thursday January 03, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக திருச்சி மாவட்டத்தின் லால்குடி புது உத்தமநூரில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .இதில் நிலவேம்பு கசாயம் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது . இதன் மூலம் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர் .

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பள்ளிவாசலுக்கு சந்தூக் வழங்கப்பட்டது

Posted On :Monday December 31, 2012

Image
திருச்சி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட சமூக மேம்பாட்டு துறையின் சார்பாக புதுக்குடி அல்-முகமதியா பள்ளிவாசலுக்கு ரூபாய்16000 மதிப்புள்ள சந்தூக்கை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் I.சபியுல்லாஹ் அவர்கள் பள்ளிவாசலின் துணை செயலாளர் முஹம்மத் அலி அவர்களிடம் வழங்கினார்.

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – திருச்சி துறையூரில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்

Posted On :Monday December 10, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள VRG மஹாலில் வைத்து 06.12.2012 அன்று மாலை 06.30 மணியளவில் \”பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை\” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் சபியுல்லாஹ் தலைமை தாங்கினார் . பாப்புலர் ப்ரண்டின் முஹம்மது இப்ராஹீம் வரவேற்ப்புரையாற்றினார்.

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – லெப்பைக்குடிகாட்டில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டம் மற்றும் நோட்டீஸ் பிரச்சாரம்

Posted On :Friday December 07, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டில் 06.12.2012 அன்று காலை 11.00 மணியளவில் பேருந்து நிலையம் அருகில் வைத்து \”பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை\” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் லெப்பைக்குடிகாடு நகர தலைவர் A.சித்தீக் பாஷா தலைமை தாங்கினார் . மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.அபூபக்கர் சித்தீக் சிறப்புரையாற்றினார் . பாப்புலர் ப்ரண்டின் முஹம்மது அலி நன்றியுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து லெப்பைக்குடிகாட்டில் பல்வேறு இடங்களில் \”பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை\” என்ற தலைப்பிட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – பெரம்பலூர் வி.களத்தூரில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டம் மற்றும் நோட்டீஸ் பிரச்சாரம்

Posted On :Friday December 07, 2012

Image
பெரம்பலூர் : பாபரி மஸ்ஜித் சங்பரிவார பாசிஸ்டுகளால் திட்டமிட்டு இடிக்கப்பட்டு 20 வருடங்கள் கழிந்தும் அதில் இன்றளவும் நீதி மறுக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. டிசம்பர் 6 தினத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஃபாசிச எதிர்ப்பு தினமாக அனுசரித்து ‘பாபரி மஸ்ஜித் என்றும் நம் நினைவில்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெறுகிறது . தமிழகத்தில் டிசம்பர் 6 அன்று “பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டு ! குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு !!” எனும் முழக்கத்தோடு “பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை” என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் , கருத்தரங்குகள் , போஸ்டர் பிரச்சாரம் மற்றும் 1 இலட்சம் துண்டு பிரசுரங்கள் விநியோகம் என பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெறுகிறது . அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 06.12.2012 அன்று மாலை 6.30 மணியளவில் கௌசர் பானு திடலில் வைத்து “பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் வி.களத்தூர் நகர தலைவர் G .அப்துர் ரஹீம் தலைமை தாங்கினார் . மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.அபூபக்கர் சித்தீக் சிறப்புரையாற்றினார் . பாப்புலர் ப்ரண்டின் சதாம் உசேன் நன்றியுரையாற்றினார். முன்னதாக காலையில் வி.களத்தூரில் பல்வேறு இடங்களில் “பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை” என்ற தலைப்பிட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது .

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Tuesday November 20, 2012

Image
காஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் அருகில் 19.11.2012 அன்று மாலை 5 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் திருச்சி மாவட்ட செயலாளர் சபியுல்லா தலைமை தாங்கினார் . பாப்புலர் ஃப்ரண்ட் திருச்சி மாவட்ட தலைவர் அமீர் பாஷா மற்றும் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் K .முபாரக் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் .

பாப்புலர் ப்ரண்ட் ஏன் ? திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரங்கள்

Posted On :Saturday November 03, 2012

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றது.இதில் நோட்டீஸ் பிரச்சாரம், வாகனப் பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெறுகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் ஆழ்வார்தோப்பு , அரியமங்கலம் , பீமாநகர் , பாலக்கரை, புத்தாநத்தம் , வொறையூர் , துறவகுறிச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. வாகனப் பிரச்சாரத்தில் அனைத்து மக்களுக்கும் வீடு வீடாக சென்று \”பாப்புலர் ப்ரண்ட் ஏன் ?\” எனும் தலைப்பிட்ட நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? – திருச்சியில் நடைபெற்ற பிரச்சார பயிற்சி முகாம்

Posted On :Thursday October 11, 2012

Image
திருச்சி மண்டலத்திற்கான பேச்சாளர் பயிற்சி முகாம் திருச்சியில் 10.10.2012 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரச்சார பயிற்சி வகுப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணை தலைவர் இஸ்மாயீல் அவர்கள் வழங்கினார்.. இதில் திருச்சி மண்டலத்தை சேர்ந்த பல பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

சட்டப்படி பிணையில் விடு !அப்பாவிகளை விடுதலை செய் !! பெரம்பலூரில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம்

Posted On :Thursday September 27, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தி வரும் \”சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !!\” எனும் தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பெரம்பலூரில் 14.09.2012 அன்று மாலை சரியாக 7:00 மணியளவில் பெரம்பலூர் லப்பைக்குடிக்காட்டில் பலத்த மழைக்கு மத்தியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On :Tuesday September 18, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On :Tuesday September 18, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

சட்டப்படி பிணையில் விடு !அப்பாவிகளை விடுதலை செய் !! திருச்சியில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம்

Posted On :Tuesday September 18, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தி வரும் \”சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !!\” எனும் தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னையில் 15.09.2012 அன்று மாலை சரியாக 6:50 மணியளவில் திருச்சி ஆழ்வார் தோப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருச்சி காமராஜ் நகர் – சட்டப்படி பிணையில் விடு! நிரபராதிகளை விடுதலை செய்!! தெருமுனை கூட்டம்

Posted On :Thursday September 13, 2012

Image
சட்டப்படி பிணையில் விடு! நிரபராதிகளை விடுதலை செய்!! என்ற தலைப்பில் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து மாநிலங்களிலும் ஒரு மாதக்காலம் பல்வேறு பிரச்சாரங்கள் செய்து வருகின்றது . இதன் ஒரு பகுதியாக இன்று பிரச்சார தெருமுனை கூட்டம் திருச்சி காமராஜ் நகர் மில்லத் பள்ளிவாசல் தெருமுனை அருகில் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் சகோ.சௌகத் அலி தலைமை மற்றும் வரவேற்பு உரை ஆற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சகோ.அமீர் பாஷா சிறப்புரை ஆற்றினார்.சகோ.சாதிக் தெருமுனை பிரசாரத்தை தொகுத்து வழங்கினார்.முடிவில் சகோ.முஹம்மத் அன்சாரி நன்றி உரை ஆற்றினார்

பெரம்பலூர் – வி.களத்தூரில் கல்வி உதவி தொகை பெறுவதற்கான வழிகாட்டி முகாம்

Posted On :Saturday July 28, 2012

Image
பெரம்பலூர் :பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூரில் 25 .07 .2012 அன்று மாணவ / மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட்டது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்து போராட்டம்

Posted On :Thursday July 19, 2012

Image
பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ் பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று 17-07-2012 அன்று நடைபெற்றது.

திருச்சியில் 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் இடம் – பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் சகோ. I.சபியுல்லாஹ் பாராட்டு

Posted On :Thursday June 09, 2011

Image
திருச்சியில் 10ஆம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் மாநில அளவில் மூன்றாம் இடத்ததையும் பிடித்த மாணவர்கள் ஜெய்பிரகாஷ் மற்றும் ஜோதீஸ்வரன் – மதிப்பெண் – 494/500 ஆகியோர்க்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் சகோ. I.சபியுல்லாஹ் நினைவு கேடயமும் பாராட்டுதலையும் அளித்தார்.