Breaking News

Districts News

sec-resolution-poster

விவசாய நிலங்களை பாதிக்கும் ஹைட்ரோ ஹார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயற்குழு தீர்மானம்!

பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியாவின்  மாநில செயற்குழு கூட்டம் பிப்ரவரி 21மற்றும் 22 ஆகிய இரு தினங்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்றது.  மாநில தலைவர் M.முஹம்மது

0 comments
14890516_354434614948490_1619232810362513429_o

மேட்டுப்பாளையத்தில் பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) & நேஷ்னல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்த துடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) & நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இணைந்து மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு கண்டன

0 comments
14249695_1790043321219228_2606656321222745597_o

“மத்திய பா.ஜ.க அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து!” – மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hate) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் 30 வரை

0 comments
13435403_1757465211143706_2946595425417416411_n

கோவை வடக்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

கோவை வடக்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இன்று (17-06-2016) வெள்ளிக்கிழமை மேட்டுப்பாளையம் தங்கப்பா திருமண மண்டபத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

0 comments

ஊட்டியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

கோவை வடக்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கொண்டாட்டம்!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

கோவை வடக்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி!

Posted On :Monday January 26, 2015

Image
இந்திய திருநாட்டின் 66- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேட்டுப்பாளையம் ஷரீப் காலனி பகுதியில் இன்று (26-1-2015) காலை 9.30. மணியளவில் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற உதகை சாலை சீரமைப்பு பணி!

Posted On :Saturday November 08, 2014

Image
மேட்டுப்பாளையத்தில் கன மழையால் உதகை சாலையில் மரம் விழந்து வாகனங்கள் செல்லமுடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். இதனை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீட்பு மற்றும் நிவாரனகுழவினர் அங்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்தி சரி செய்தனர்.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு கோவை வடக்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது.

மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க. வின் மத துவேஷ கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday September 17, 2014

Image
பாஜக அமைச்சர்களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பாஜக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், பாஜகவின் மதவாத கொள்கையை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது.

கோவை வடக்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

மேட்டுப்பாளையம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் காட்டூர் சுன்னத் ஜமாத் இணைந்து நடத்திய ஸஹர் நிகழ்ச்சி!

Posted On :Saturday July 26, 2014

Image
முஸ்லிம் சமுதாயத்திற்குள் நிலவி வரும் ஒற்றுமையின்மையை தகர்த்து, முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழும் வண்ணம் மேட்டுப்பாளையம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் காட்டூர் சுன்னத் ஜமாத் இணைந்து நடத்திய ஸஹர் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், காட்டூர் சுன்னத் ஜமாத்தின் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Sunday July 20, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை வடக்கு மாவட்டம் சார்பாக மேட்டுப்பாளையத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜெயினுலாப்தீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், செயல்வீரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஃபலஸ்தீன் மீது தொடரும் இஸ்ரேலின் கொலைவெறித்தாக்குதலை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday July 12, 2014

Image
உலக பயங்கரவாத நாடான இஸ்ரேல் கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது. சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும்.

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தர்பியா நிகழ்ச்சி!

Posted On : Monday March 24, 2014

Image
கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் இரும்பு கடை, காட்டூர் பகுதியில் 24/3/14 அன்று பொது மக்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது.

இராமநாதபுரம் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Monday February 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆரம்பிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேட்டுப்பாளையத்தில் UAPA – எதிர்ப்பு மக்கள் இயக்கம் நடத்திய UAPA – சட்டத்திற்கு எதிராக சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

Posted On :Wednesday March 05, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Friday January 17, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பொதுக்கூட்டம்:

Posted On :Monday April 29, 2013

Image
கோவை வடக்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா பொதுக்கூட்டம் மற்றும் இலவச தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் அருகில் மஜீத் திடலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோவை வடக்கு மாவட்ட தலைவர் A.S. ஷபீக் அஹமது தலைமை தாங்கினார். சமூக மேம்பாட்டு துறை பொறுப்பாளர் அஸ்ரப் கிராஅத் ஓதினார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் A. காஜா மைதீன் வரவேற்றார்.

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ப்ரண்டின் சார்பாக நடைபெற்ற நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Posted On :Saturday December 15, 2012

Image
கோவை வடக்கு : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக கோவை வடக்கு மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்தில் உள்ள இரும்புக்கடை , தோல் ஷாப் , பெரிய பள்ளிவாசல் பின்புறம் , காடூர் பள்ளிவாசல் அருகில் , மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் நிலவேம்பு கசாயம் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது . இதன் மூலம் 4000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர் .

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்

Posted On :Friday December 14, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 06.12.2012 அன்று கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சிவசக்தி கல்யாண மண்டபத்தில் வைத்து மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது . SDPI கட்சியின் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நஜுமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் நிஜாம் முகைதீன் மற்றும் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அட்வகேட் . ராஜா முஹம்மது ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள் . இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர் .

மேட்டுப்பாளையம் இராணுவ வாகனம் விபத்து மீட்புபணியில் பாப்புலர் ப்ரண்ட்

Posted On :Wednesday August 08, 2012

Image
நீலகிரி மாவட்டம் குன்னூர் அரவன்காட்டில் உள்ள ராணுவ மையத்தை சேர்ந்த சரவணன் -32 என்பவர் மேகாலய மாநிலத்தில் மரணமடைந்தார் .அவரின் உடல் கோவை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரின் உடலை வாங்கி சென்ற ராணுவ வாகனம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் நாலு ரோடு அருகில் இன்று மாலை ( 8 – 08 -2012 ) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வாகனத்தில் இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற ராணுவ வீரரும் ,ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரெட்டி என்ற ராணுவ வீரரும் ,சிவிலியன் ஒருவரும் என மூன்று பேர் மரணமடைந்தனர் .