Breaking News

Districts News

Press Meet , Get together @ Salem (2)

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு தேவை! – சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் கோரிக்கை!

பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (19.08.17 – சனிக்கிழமை) நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக

0 comments
salem

சேலத்தில் நடைபெற்ற மீலாது விழா நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் A. முஹம்மது பயாஸ் பங்கேற்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ஐவர் குழு லால் மஜீத் நிர்வாகம், முஹல்லாவாசிகள் இணைந்து மீலாது விழா மற்றும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீலாது

0 comments
ssg-4th-year-inaguration-salem-7

சேலத்தில் நடைபெற்ற சர்வ சிக் ஷா கிராம் திட்டத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக சர்வ சிக் ஷா கிராம் திட்டத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி 

0 comments
flag-hosting-salem-4

குடியரசு தினத்தை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி!

இந்தியாவின் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று (26.01.2017) காலை 8.45 மணி அளவில் சேலம்

0 comments
20161106_203805-1

சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மபெரும் ஷரிஅத் பாதுகாப்பு பொதுக்கூட்டம்!

ஷரிஅத் சட்டங்களை துடைத்தெறிந்து விட்டு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து சேலம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக

0 comments
14910280_628188000685909_8135269306040629774_n

நாமக்கல்லில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் பங்கேற்பு!

நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா, ஷரீஅத் சட்ட பாதுகாப்பு குழு மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து இன்று (02-11-2016) நாமக்கல்லில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக

0 comments

மறைந்த காந்தியவாதி சசி பெருமாள் அவர்களின் இல்லத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் சென்று அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல்!

Posted On :Friday August 07, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது பயாஸ் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்ட தலைவர் சையத்அலி ஆகியோர் இன்று (07/08/15) வெள்ளிக்கிழமை மறைந்த காந்தியவாதி சசி பெருமாள் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது மகனை சந்தித்து தங்களுடைய அனுதாபங்களை தெரிவித்ததுடன் ஆறுதலும் கூறினர்.

சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பள்ளி செல்வோம் மாநில துவக்க விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Wednesday June 03, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 5 ஆண்டுகளாக “School Chalo (பள்ளி செல்வோம்)” என்கிற தலைப்பில் தேசிய அளவில் பிரச்சாரம் மற்றும் களப்பணிகள் செய்து வருகிறது. இந்திய தேசத்தில் அனனத்து சமூகமும் அடிப்படை கல்வி பெற்ற நிலையை அடைய உதவி செய்வதே இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும். சமீபத்தில் வெளிவந்த ‘மில்லினியம் இந்தியா எஜூகேஷன் ஃபோரம்’ ( MIEF ) என்கிற அமைப்பின் கணகெடுப்பின் படி நமது நாட்டில் குழந்தைகளில் 4% பள்ளிக்கே சென்றதில்லை, 58% தொடக்க கல்வியை முடித்ததில்லை, 90% பள்ளி கல்வியை நிறைவு செய்ததில்லை. இந்த நிலையை மாற்ற அரசுடன் இணைந்து பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் இது போன்ற பின்தங்கிய நிலையை மாற்ற தொடர்ந்து களப்பணியை செய்து வருகிறது. இவ்வாண்டும் ஜனவரி-மாரச் மாதத்தில் மேற்கு வங்கம், பிஹார், ஜார்கண்ட், அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தில் இப்பிரச்சாரம் முடிவு பெற்றுள்ளது. மே மற்றும் ஜுன் மாதத்தில் தென் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இப்பிரச்சாரத்தில் கல்வி பணியில் தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சியளித்தல், கிராமங்களில் கல்வி கணக்கெடுத்தல், பள்ளி படிப்பை இடையில் விட்டவர்களை பள்ளியில் சேர்த்தல், பெற்றோருக்கான குழந்தை வளர்ப்பு வழிகாட்டி முகாம்கள், விழிப்புணர்வு பேரணிகள், கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற களப்பணிகள் மற்றும் முகாம்கள் மூலம் பிரச்சாரத்தை செய்து வருகிறோம்.

சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான மாபெரும் தர்ணா போராட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!

Posted On :Friday September 12, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய தேச மக்களிடையே சகோதரத்துவமும், சமுத்துவமும், ஒற்றுமையும் மேலோங்கும் விதமாக தேசம் முழுவதும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றது. இது போல ஒவ்வொரு மாநிலத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒவ்வொரு மாவட்ட ரீதியாக அனைத்து சமுதாய தலைவர்கள், சமூக தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

பாலஸ்தீனிய குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday July 16, 2014

Image
அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீன மக்களின் இடங்களை ஆக்கிரமித்து அங்கு சட்டவிரோத யூத குடியிருப்புகளை நிறுவி அங்கு மனித உரிமை மீறல்களை நடத்தி வருகின்றனர் யூத பயங்கரவாதிகள். பாலஸ்தீனியர்களின் நிலங்களை ஆக்கிரமித்து அதற்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டியது மட்டுமல்லாமல், பாலஸ்தீனியர்கள் மீது கொடூர தாக்குதலும் நடத்தி வருகின்றனர் யூத பயங்கரவாதிகள். கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்கள் குறிப்பாக பாலஸ்தீன குழந்தைகள் மீதான தாக்குதல் யூத சியோனிஸ பயங்கரவாதிகள் அதிகரித்துள்ளனர்.

சேலத்தில் UAPA – எதிர்ப்பு மக்கள் இயக்கம் நடத்திய UAPA – சட்டத்திற்கு எதிராக சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

Posted On :Wednesday March 05, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

சேலத்தில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On :Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் பாத்திமா நகரில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டி முகாம்!

Posted On :Monday February 17, 2014

Image
சேலம் மாவட்டம் பாத்திமா நகரில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டி முகாம் 23.02.2014 அன்று நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக சேலம் மாவட்டத்தில் “முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram)”

Posted On :Wednesday January 15, 2014

Image
சேலம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக “முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram)” திட்டம் 15.01.14 அன்று சேலம் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக சேலம் மாவட்டத்தை கல்வி வளர்ச்சிக்காக தத்தெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் எந்த ஒரு குழந்தையும் அவர்களது பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்து விடக்கூடாது என்பதாகும்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Friday January 17, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

சேலத்தில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Friday January 17, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

ஆத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தர்பியா நிகழ்ச்சி!

Posted On :Wednesday January 15, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் சார்பாக 14.01.2014. அன்று மாலை 4மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் மதரஸாவில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சேலம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு!

Posted On :Saturday December 07, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்டத்தின் சார்பாக பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் வெளியீடு நிகழ்ச்சி நேற்று (06.12.2013) நடைபெற்றது.

காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 17, 2013

Image
சேலம்: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக சேலத்தில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Thursday August 15, 2013

Image
சேலம்: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

Posted On :Sunday July 28, 2013

Image
சேலம்: சமூகத்தை புணரமைக்கும் பணியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது . அதை நிறைவேற்றும் நோக்கில் தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட். மாதாந்திர ஒழுக்கப் பயிற்சி முகாம் , விழிப்புணர்வு பிரச்சாங்கள், கருத்தரங்குகள், குடும்ப நல ஆலோசனைகள் உட்பட பெண் சமூகத்தை முன்னேற்றும் விதமாக பல சமூகப் பணிகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செய்து வருகின்றது

சேலத்தில் நடைபெற்ற ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Sunday June 09, 2013

Image
சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) நிகழ்ச்சி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சேலம் மாவட்டம் பொன்னம்மா பேட்டை திப்பு நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்டதலைவர் முஹம்மது பயாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். பைரோஸ் கான் அவர்கள் வரவேற்புரையாற்றினார்

சேலத்தில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 26/04/13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் நகரத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் சேலம் மாவட்ட தலைவர் M. முஹம்மது பாயாஸ் தலைமை தாங்கினார்.

சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி

Posted On :Friday April 12, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக சேலம் மாவட்டம் முள்வாடி பகுதியைச் சார்ந்த சகோதரர் ஹுசைன் என்பவருக்கு கட்டில்(படுக்கை) வழங்கப்பட்டது.

சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பொதுக்கூட்டம்:

Posted On :Tuesday March 26, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சேலம் மாவட்டம் முஹம்மது புறாவில் 24.03.2013 அன்று சரியாக இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்ட தலைவர் முஹம்மது பயாஸ் தலைமை தாங்கினார். பைரோஸ் கான் அறிமுகவுரையாற்றினார். தொகுப்புரையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது அலி வழங்கினார். பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொது செயலாளர் காலித் முஹம்மது இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

சேலத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட்[NWF] நடத்திய கையெழுத்து இயக்கம்:

Posted On :Saturday March 09, 2013

Image
பெண்களின் பாதுகாப்பு! நாட்டின் பாதுகாப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மார்ச் -8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக சேலத்தில் கையெழுத்து இயக்கம் சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே நடைபெற்றது.

எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட அனைத்து கட்சிகள் சார்பில் நடந்த முற்றுகை போராட்டம்

Posted On :Thursday February 28, 2013

Image
விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் சேலத்தில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலப்பொருளாளர் அம்ஜத் பாஷா,சேலம் மாவட்ட பொதுச்செயலாளர் சரீஃப்,ஈரோடு மாவட்ட பொதுச்செயலாலர் ஹசன் அலி,மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இவர்களுடன் மதிமுக,பாமக,விசிக,விவசாயிகள் சங்கம்,பெரியார் திராவிட கழகம்,மமக உள்ளிட்ட பல கட்சியினர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய ” பெண்களை பாதுகாப்போம் ” விழிப்புணர்வு பிரச்சாரம்

Posted On :Tuesday February 12, 2013

Image
சேலம் : தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக ” பெண்களை பாதுகாப்போம் ” எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது . இதில் பொதுமக்கள் அதிகம் சங்கமிக்கும் இடங்களான பஸ் ஸ்டான்ட் , ரயில்வே ஸ்டேஷன் , பள்ளி , கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் ” பெண்களை பாதுகாப்போம் ” எனும் தலைப்பிட்ட நோட்டிஸ் விநியோகம் செய்யப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது

சேலம் ஆத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இரத்த தானம் மற்றும் இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம்

Posted On :Tuesday January 22, 2013

Image
சேலம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃப் இந்தியா மற்றும் சேலம் அரசு மருத்துவமனை சார்பில் இரத்த தானம் மற்றும் இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம் 20.01.2013 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள மகாலட்சுமி நர்சரி & பிரைமரி ஸ்கூலில் வைத்து நடைபெற்றது.

அறிவகம் சார்பில் சேலத்தில் நடைபெற்ற தாவா பயிற்சி முகாம்

Posted On :Monday November 26, 2012

Image
சேலம் : தமிழ்நாடு டெவலப்மன்ட் பவுண்டேஷன் டிரஸ்ட்டின் கீழ் இயங்கி வரும் அறிவகம் மதரஸா சார்பில் தாவா பயிற்சி முகாம் 25.11.2012 அன்று இரவு 6.30 மணி முதல் 8.30 மணி வரை சேலத்தில் உள்ள சுபம் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.தாவா களத்தில் பல வருடங்களாக செயலாற்றி வரும் தாயீ.சுல்தான் இப்ராஹீம் அவர்கள் தாவா செய்வது எப்படி ? என்பது குறித்து உரை நிகழ்த்தினார் . இப்பயிற்சி முகாமில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் .

தர்மபுரி கலவரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தலித் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கு நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் மாநில செயலாளர் பங்கேற்பு

Posted On :Friday November 23, 2012

Image
தர்மபுரி தலித்துகளுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி 21.11.2012 அன்று சென்னையில் நடந்தது . இதில் பாப்புலர் ப்ரண்டின் மாநில செயலாளர் முஹம்மது ஷேக் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டார்கள் . இதில் தர்மபூரியில் தலித்துகளுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவாதங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

தர்மபுரி தாக்குதலை கண்டித்து சமூக சமத்துவ படை கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் பங்கேற்பு

Posted On :Sunday November 18, 2012

Image
தர்மபுரி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டி தாக்குதலை கண்டித்தும் , வேடிக்கை பார்த்த தமிழக அரசை கண்டித்தும் சமூக சமத்துவ படை கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 17.11.2012 அன்று சென்னை மெமோரியல் ஹால் முன்பில் வைத்து காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமூக சமத்துவ படை கட்சியின் நிறுவன தலைவர் எழுத்தாளர்.ப.சிவகாமி IAS , பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் , சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம் , மக்கள் உரிமை கழகத்தின் பொது செயலாளர் வழக்கறிஞர் தோழர்.புகழேந்தி ஆகியோர் கொண்டு கண்டன உரையாற்றினார்கள் . இதில் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On :Wednesday September 19, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

சேலத்தில் அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday September 16, 2012

Image
இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ‘innocence of muslims’ என்ற திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இச்சம்பவம் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கும் வேளையிலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான யூதன் சாம் பாசிலி மீண்டும் இஸ்லாத்தை மோசமாக விமர்சித்து பேட்டியளித்துள்ளான். இஸ்லாம் ஒரு புற்றுநோய் என்று கருத்து தெரிவித்த பாசிலி தனது திரைப்படம் ஒரு அரசியல் சினிமா என்று கூறியுள்ளான்.மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த அவதூறான அவமதிக்கத்தக்க தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறான்.

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On :Wednesday September 19, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

சேலத்தில் அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday September 16, 2012

Image
இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ‘innocence of muslims’ என்ற திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இச்சம்பவம் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கும் வேளையிலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான யூதன் சாம் பாசிலி மீண்டும் இஸ்லாத்தை மோசமாக விமர்சித்து பேட்டியளித்துள்ளான். இஸ்லாம் ஒரு புற்றுநோய் என்று கருத்து தெரிவித்த பாசிலி தனது திரைப்படம் ஒரு அரசியல் சினிமா என்று கூறியுள்ளான்.மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த அவதூறான அவமதிக்கத்தக்க தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறான்.

சேலம் மாவட்டத்தை சார்ந்த ஒரு ஏழை குடும்பம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவர்களின் வீட்டை பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக புனரமைக்கப்பட்டது

Posted On :Saturday December 24, 2011

Image
சேலம் மாவட்டம் வெள்ளாளபட்டியில் (ஓமலூர்) ஸ்டவ் ரிப்பேர் செய்து வரும் சகோ.காசிம் அலி என்பவர் தன் மனைவி மற்றும் ஒரு மகளுடன் ஓலை குடிசையில் வசித்து வந்தார். மழையில் ஓலை குடிசை சேதமடைந்து புனரமைக்க வழியின்றி மழையிலும் குளிரிலும் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் தனது வீட்டை புனரமைக்க உதவுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் சேலம் மாவட்ட நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார்.