Breaking News

Districts News

SGA (2)

சென்னை மற்றும் மதுரையில் உரிமை முழக்க மாநாடு! – பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் இன்று (17/09/2017) தேனியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்

0 comments
Poster

கம்பம் தாத்தப்பன் குளம் பகுதியில் இந்து முன்னணி குண்டர்களால் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட பிரச்சனையில் காவல்துறையினர் நீதியோடு நடந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே குண்டாஸ் வழக்கு! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன் குளம் பகுதியில் அனைத்து சமூக மக்களும் சமூக நல்லிணக்கத்தோடும், சகோதரத்துவ வாஞ்சையோடும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதத்திலும், ஒற்றுமையாக

0 comments
PFI_-_Popular_Front_of_India_Flag

தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகைகளுக்கு மத்திய பாஜக அரசு செவிசாய்க்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் வலியுருத்தல்!

தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் ஏப்ரல் 1ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள்

0 comments
neduvasal

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு மக்கள் போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் முழு ஆதரவு! – பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர்

0 comments
certificate-distribution-theni-4

தேனி அறிவகத்தில் மூன்று மாத இஸ்லாமிய கல்வி பயின்று முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் பங்கேற்பு!

மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நமது அறிவகத்தில் மூன்று மாத இஸ்லாமிய கல்வி பயின்று முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மர்ஹூம்  ஹிதாயத்துல்லாஹ் ஆசிரியர் நினைவு ஹாலில்

0 comments
vivasayam-theni-1

கூடலூரில் நடைபெற்ற விவசாயம் குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தேனி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக விவசாயம் குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடலூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்

0 comments
Theni protest (4)

தேனியில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்பு!

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு விரோதமாக, மத்திய பாஜக அரசு அமல்படுத்த முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தேனி மாவட்ட ஜமாத்துல்

0 comments
a

தேனியில் நடைபெற்ற பொது சிவில் சட்டம் மதச் சுதந்திரத்திற்கு எதிரானது கலந்தாய்வு கூட்டம்!

பொது சிவில் சட்டம் மதச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற தலைப்பில் தேனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் 24-10-2016 அன்று நடைபெற்றது.  இந்த

0 comments
14799952_196147700826734_1297746617_o

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழுவில் தீர்மானம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட தலைவர்கள் சந்திப்பு அக்டோபர் 23 மற்றும் 24 தேதிகளில் தேனியில் நடைபெற்றது. மாநில தலைவர்

0 comments
14322298_1078930142142703_3708953673527002698_n

தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற சர்வ சிக் ஷா கிராம் (முழுமையான கல்வி கிராமம்) துவக்க விழா நிகழ்ச்சி!

தேனி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக சர்வ சிக்ஷா கிராம் (முழுமையான கல்வி கிராமங்களை உருவாக்குதல்) திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம்

0 comments
14102291_1139078412837489_4053182871742524894_n

தேவதானப்பட்டி நகரம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி நகரம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 28-08-2016 அன்று மாலை 07.00மணிக்கு தேவதானப்பட்டி பள்ளிவாசல் மண்டபம் அருகில் மார்க்க விளக்க பொதுக்

0 comments
13731589_1109728099105854_8135411944692400902_n

தேனி மாவட்டம் கம்பத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்பு!

தேனி மாவட்டம் கம்பம் நகர இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக இன்று (24-06-2016) மாலை 4 மணிக்கு ஜாஹீர் நாயக் அவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசையும், மகாராஷ்டிரம் அரசையும்

0 comments

இரத்ததான சேவையில் மாவட்ட அளவில் முதலிடம் வகித்த பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனர்ஸ் ஃபோரத்திற்கு பதக்கம் மற்றும் பாராட்டு!

Posted On :Thursday October 08, 2015

Image
சென்னை எழும்பூர் நலவாழ்வு மற்றும் குடும்ப நலபயிற்சி கூட்ட அரங்கில் கடந்த 07/10/2015 அன்று தமிழக அளவில் தேசிய தன்னார்வ இரத்ததான விழா நடைபெற்றது. இவ்விழாவில் தேனி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனர்ஸ் போரத்திற்கு 2014-2015 ஆம் ஆண்டின் சிறந்த சேவை மற்றும் மாவட்டத்தில் முதலிடம் வகித்ததற்காக மாண்புமிகு தமிழக நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்களால் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிகிறது. இதன் ஒரு பகுதியாக தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு போன்ற பல்வேறு பகுதிகளில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிகிறது. அதன் ஒரு பகுதியாக உத்தமபாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றம் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம் கூடலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு இதய நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Posted On :Tuesday February 17, 2015

Image
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தமிழ் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு!

Posted On :Sunday January 11, 2015

Image
தேனியில் மூன்று நாட்களாக நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுக்குழு நிறைவு : M.முஹம்மது இஸ்மாயீல் மாநில தலைவராக தேர்வு! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு ஜனவரி 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தேனியில் நடைபெற்றது. மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்கள் தலைமை தாங்கினார். இப்பொதுக்குழுவில் துவக்கவுரையாற்றிய மாநில தலைவர் தனது உரையில் பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த காலங்களில் கடந்து வந்த பாதை மற்றும் இயக்கத்தின் வளர்ச்சி குறித்து கோடிட்டுக்காட்டினார். பின்பு தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் A.முஹம்மது யூசுப் அவர்கள் தேசிய அளவிலான பணிகளைக் குறித்து எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது அவர்கள் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
நம் நாடு சுதந்திரம் பெற்றது முதல் பாபரி மஸ்ஜித் என்பது துரோகத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. நமது தேசத்தினை ஆட்சி செய்யும் அனைத்து அரசுகளும் மதவாத சக்திகளின் பிடியில் அகப்பட்டு தொடர்ந்து பாபரி மஸ்ஜித் விஷயத்தில் நீதியினை மறுத்து வருகிறார்கள். நமது அரசியல் சாசன சட்டத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்காத ஃபாசிஸ கூட்டம் தான் டிசம்பர் 6, 1992 அன்று பாபரி மஸ்ஜிதை தகர்த்தது. பாபரி மஸ்ஜித் பிரச்சனை என்பது வெறுமனே ஒரு வழிபாட்டு உரிமை பிரச்சனை என்ற அளவில் சுருக்கி விடமுடியாது. மாறாக அது மக்கள் நமது நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையின் மீது வைத்த நம்பிக்கையாகும். பாபரி மஸ்ஜித் இடிப்பு நமது அரசியல் சாசன சட்டத்தின், மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கோட்பாடுகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

பா.ஜ.க-ன் மத துவேஷ கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கம்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Thursday September 18, 2014

Image
பி.ஜே.பி. எம்.பி.க்களால் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படும் வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரித்து வருவதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது, வெறிபிடித்த அரசியல்வாதிகளான யோகி ஆதித்யா நாத் மற்றும் சாக்ஷி மகராஜிற்கு எதிரான உறுதியான துரித நடவடிக்கைகளையும் கோரியுள்ளது. உ.பி.யில் இடைத்தேர்தல்களுக்கு முன்னால் அங்கு ஒரு வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இரண்டு எம்.பி.க்களும் பேசியுள்ளனர். தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அதிகாரத்திற்கு வரும் காலங்களில் எல்லாம் முஸ்லிம் சமூகத்திற்கும் மற்றும் அதன் மத நிறுவனங்களுக்கும் எதிரான வன்முறை பேச்சுக்கள் தொடர்கதையாகி விட்டது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் சுதந்திர தின கருத்தரங்கம்!

Posted On :Friday August 15, 2014

Image
இந்தியா சுதந்திரம் அடைந்து 68 வது ஆண்டை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ஷஹீத் திப்பு சுல்தான், டாக்டர் அம்பேத்கர், பகத் சிங், ஓளரங்கசிப், ஹைதர் அலி, அஷ்ஃபகுல்லாஹ் கான், அசாஃப் அலி, குஞ்சாலி மறைக்காயர், ஷாநவாஸ் கான், கிட்வை ரஃபீக் அஹமது போன்ற தியாகிகளை நினைகூறும் விதமாகவும், போராடி பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கவும், “சுதந்திரத்தின் காவலாளிகளாக இருப்போம்” என்ற முழக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் சுதந்திர தின பொதுக்கூட்டங்கள் மற்றும் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டிற்கான மாவட்ட அலுவலகம் திறப்பு விழா!

Posted On : Friday August 15, 2014

Image
புதிய சமூக, பொருளாதார , அரசியல் மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத் துறை மூலம் கல்வி, மருத்துவம், உதவிகள், பேரிடர் உதவுதல் என நாடு முழுவதும் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, தேனி மாவட்டம் உத்தமபளையத்தில் சமூக மேம்பாட்டிற்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகத்தை சுதந்திர தினத்தன்று (15- 08-2014) வெள்ளிக்கிழமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் திறந்து வைத்தார்.

தேனி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

தேனி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

தேனி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற பெருநாள் விளையாட்டுப் போட்டி!

Posted On : Tuesday July 29, 2014

Image
தேனி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேவதானப்பட்டியில் குழந்தைகளுக்கான பெருநாள் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட, நகர நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On : Saturday July 19, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, வட்டியில்லா சிறு தொழில் கடனுதவி, குடிநீர் விநியோக திட்டம், இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள், நிவாரண உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.

தேனி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனர்ஸ் ஃபோரம் மற்றும் அரசு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து கம்பத்தில் நடத்திய பொது இரத்ததான முகாம்!

Posted On : Friday May 09, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக தேசிய அளவில் பல்வேறு நாட்டு நலப் பணிகள் நடைபெற்று வருகிறது. “ஆரோக்கியமான மக்கள் வலிமையான சமுதாயம்” எனும் தேசிய அளவிலான பிரச்சாரத்தின்கீழ் யோகா பயிற்ச்சிகள் இரத்ததான முகாம்கள், இலவச மருத்துவ முகாம்கள், அரசு பொது மருத்துவமனை சுத்தம் செய்தல், என பொது மக்களின் நலன் கருதி பல்வேறு நாட்டு நலப்பணிகள் செய்து வருகிறது.

UAPA-எதிர்ப்பு மக்கள் இயக்கம் தேனியில் நடத்திய எழுந்து நிற்போம்-UAPA-சட்டத்திற்கு எதிராக மெலுகுவர்த்தி ஏந்தி பிரச்சாரம்!

Posted On :Friday February 21, 2014

Image
2008 டிசம்பர் 15 மும்பை தாக்குதல் சம்பவம் நடைபெற்று 3 வாரங்களுக்கு பின்பு மத்திய அரசு இரண்டு புதிய தீவிரவாத செயல்கள் தடுப்பு சட்டங்களை நாடாளுமன்றத்தில் சமர்பித்தது. ஒரே ஒருநாள் விவாத்திற்கு பிறகு நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.இந்த அடிப்படையில் அவசர அவசரமாக இயற்றப்பட்ட சட்டம்தான் “சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்” (Unlawful Activities (prevention) Act-UAPA) மற்றும் தேசிய விசாரணை முகமை சட்டம் (National Investigation Act – NIAA), இவ்விரு சட்டங்களும் நடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை, பொது மக்கள் மற்றும் இந்திய சமூக அமைப்புகளின் ஆய்வுக்கு உட்படுத்தாமல் நடாளுமன்றத்தில் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டு இந்த சட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேனியில் பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம்!

Posted On :Friday January 24, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாட்டு நல சமூக பணிகள் செய்து வருகிறது, அதன் ஒருபகுதியாக இன்று 24-01-2014 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் சர்க்கரை நோய் , இருதய நோய்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக தேனியில் “முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram)”

Posted On : Friday January 24, 2014

Image
தேனி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக “முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram)” திட்டம் இன்று 24-01-2014 வெள்ளிக்கிழைமை மாலை 5 மணிக்கு தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் துவங்கப்பட்டது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாபரி மஸ்ஜித் மாபெரும் பொதுக்கூட்டம்!

Posted On :Sunday December 08, 2013

Image
பாபர் மஸ்ஜித் நினைவு தினமான டிசம்பர் 6 முதல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ”பாபர் மஸ்ஜித் மீட்பும் – ஃபாசிச எதிர்ப்பும்” தேசத்தின் கடமை என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் பிரச்சாரங்கள், கருத்தரங்கம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்கள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேனி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாபரி மஸ்ஜித் விழிப்புணர்வு பிரச்சாரம்!

Posted On :Friday December 06, 2013

Image
பாபர் மசூதியினை இடித்த தினமான டிசம்பர்-06 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகம் முழுவதும் துண்டு பிரசுர விநியோகம்,பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு கருத்தரங்குகளும், பாபர் மசூதி குறித்த வரலாற்று குறும்படங்களும் மக்களுக்கு திரையிடப்பட்டன.

தேனி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” விழிப்புணர்வு பேரணி மற்றும் யோகா உடற்பயிற்ச்சி அறிமுக விழா!

Posted On :Friday November 15, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவ மனைகளை தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் யோகா உடற்பயிற்ச்சி அறிமுக விழா!

Posted On :Wednesday November 06, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவ மனைகளை தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

எகிப்து இராணுவத்தை கண்டித்து தேனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday August 21, 2013

Image
தேனி: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது.

காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து தேனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 17, 2013

Image
தேனி: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது.

காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து தேனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 17, 2013

Image
தேனி: 67வது சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், தேசத்திற்கான நமது கடமையை நினைவூட்டும் விதமாக சுதந்திர தின பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் இதற்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தேனியில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Thursday August 15, 2013

Image
தேனி: இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வது ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர போராட்ட

தேனி – பெரியகுளத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இரத்ததான முகாம்

Posted On : Friday June 28, 2013

Image
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டொனேட் ஃபாரம் மற்றும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 26-06-2013 புதன்கிழமை, நடைபெற்றது. இதில் பெரியகுளம் பகுதிசெயலாளர் பரீத் அஸ்லம் தலைமை தாங்கினார், நகரத்தலைவர் மல்கர் சாதிக் வரவேற்புரையாற்றினார்.

தேனி – கம்பத்தில் நடைபெற்ற ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Tuesday June 18, 2013

Image
தேனி மாவட்டம் கம்பத்தில் 15-06-2013 சனிக்கிழமை சுங்கத்தெருவில் உள்ள சுங்கம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேனி மாவட்ட செயலாளர் S.சையது காதர் அவர்கள் தலைமை தாங்கினார். வாவேர் பள்ளி ஜமாஅத் துணை தலைவர் P.அப்துல் ஹக்கீம் (சேட்), தலைமை ஆசிரியர் இலாஹி ஓரியண்டல் அரபிக் உயர்நிலைப்பள்ளி A.சுல்தான் அலாவுதீன் BSC,,M.A,B.E.D,, SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் M.முஹம்மது யூனுஸ், கமபம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகரத்தலைவர் K.சிக்கந்தர் ஜெய்லானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் P.ராஜா முஹம்மது அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

தேனியில் நடைபெற்ற ஸ்கூல் சலோ பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Sunday June 09, 2013

Image
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள முஸ்லிம் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியகுளம் பகுதி செயலாளர் பரீத் அஸ்லம் அவர்கள் தலைமை தாங்கினார். சகோதரர் ராஜா முஹம்மது ஹாபில் மிஸ்பாஹி அவர்கள் கிராஅத் ஓதினார்.

தேனியில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் சின்னமனூர் தேரடியில் 26/04/13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் தேனி மாவட்டதலைவர் M.சாந்த் முஹம்மது தலைமை தாங்கினார்.

தேனியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இரத்தவகை கண்டறிதல் மற்றும் இரத்ததான முகாம்

Posted On :Monday March 25, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டொனேட் ஃபாரம் மற்றும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தவகை கண்டறிதல் மற்றும் இரத்ததான முகாம் 22-03-2013 வெள்ளிக்கிழமை, உத்தமபாளையம் பைபாஸில் நடைபெற்றது. இதில் உத்தமபாளையம் நகரத்தலைவர் A.சையது அபூதாகிர் தலைமை தாங்கினார். கம்பம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகரத்தலைவர் சிக்கந்தர் ஜெய்லானி துவக்கவுரையாற்றினார். SDTU தேனி மாவட்ட தலைவர் ஹாஜி, A.முஹம்மது இப்ராஹிம் சேட் மற்றும் உத்தமபாளையம் துணைச்சேர்மன் ஜெய்லானி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தேனி மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட்[NWF] ஆற்றிய சமூக நலபணிகள்:

Posted On : Monday March 11, 2013

Image
பெண்களின் பாதுகாப்பு! நாட்டின் பாதுகாப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மார்ச் -8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக தேனி மாவட்டத்தில் சமூக நலபணிகள் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Tuesday February 19, 2013

Image
தேனி மாவட்டத்தில் 10 நகரங்களில் கொடியேற்று நிகழ்சிகள் நடைபெற்றது . கெங்குவார்பட்டியில் தேவதானப்பட்டி நகர தலைவர் J.அஹமது பாசித், தேவதானப்பட்டியில் பகுதி செயலாளர் பரீத் அஸ்லம் , துலுக்கப்பட்டியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமீம் அன்சாரி , பெரியகுளம் வடகரையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் கொடியேற்றினார்கள் .

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மனித வாழ்வின் முழு வழிகாட்டி – கம்பத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சிறுவர்களுக்கான போட்டிகள்

Posted On :Tuesday February 12, 2013

Image
தேனி : தேனி மாவட்டம் கம்பத்தில் 02.02.2013 சனிக்கிழமை பாவலர் படிப்பகம் அருகில் ” பிரியமான நபி – முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மனித வாழ்வின் முழு வழிகாட்டி” எனும் தலைப்பில் சிறுவர்களுக்கான தனித்திறமையை வெளிபடுத்தும் போட்டிகள் நடைபெற்றது.

தேனியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய ” பெண்களை பாதுகாப்போம் ” விழிப்புணர்வு பிரச்சாரம்

Posted On :Tuesday February 12, 2013

Image
தேனி : தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக ” பெண்களை பாதுகாப்போம் ” எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது . இதில் பொதுமக்கள் அதிகம் சங்கமிக்கும் இடங்களான பஸ் ஸ்டான்ட் , ரயில்வே ஸ்டேஷன் , பள்ளி , கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் ” பெண்களை பாதுகாப்போம் ” எனும் தலைப்பிட்ட நோட்டிஸ் விநியோகம் செய்யப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது .

24வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தேனியில் கேம்பஸ் ஃப்ரண்ட் நடத்திய பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம்

Posted On :Tuesday January 08, 201

Image
தேனி மாவட்டம் கம்பத்தில் 06.01.2013 அன்று காலை 11 மணியளவில் கம்பம் போக்குவரத்து பணிமனை RMTC டிப்போ முதல் கம்பம் போக்குவரத்து சிக்னல் வரை பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் K. அப்துல் அஜீஸ் B.E ., தலைமை தாங்கினார் . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கம்பம் நகர தலைவர் K.சிக்கந்தர் ஜெய்லானி ன்னிலை வகித்தார் . கம்பம் வடக்கு காவல் நிலையம் ஆய்வாளர் திரு. P. உலக நாதன் பேரணியைத் துவக்கி வைத்தார் . கம்பம் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு.M.முத்து கருப் பையா சாலைவிதிகள் குறித்து விளக்கவுரை யாற்றினார் . கம்பம் சி.பி.யூ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.A.அஹமது சலீம் M.Sc , M.Ed , M.Phil ., வாழ்த்துரை வழங்கினார் .

கம்பத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம்

Posted On :Tuesday January 01, 2013

Image
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு மற்றும் இருதய நோய் , சர்க்கரை நோய் இலவசமாக கண்டறியும் முகாம் ” தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள சுங்கம் பள்ளிக்கூடத்தில் வைத்து 29.12.2012 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது . இம்முகாமில் இலவசமாக ECG , Sugar Test கண்டறியப்பட்டது மற்றும் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றிய கையேடு இலவசமாக வழங்கப்பட்டது . இம்முகாமின் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்தனர் .

தேனி பெரியகுளத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

Posted On :Thursday January 03, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக 26.12.2012 அன்று காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை தேனி மாவட்டத்தின் பெரியகுளம் வடகரை பழைய பஸ் நிலையத்தில் வைத்து டெங்கு நோய் தடுப்பு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது .

தேனி சின்னமனூரில் பாப்புலர் ப்ரண்டின் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

Posted On : Friday December 28, 2012

Image
தேனி : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக 22.12.2012 அன்று தேனி மாவட்டத்தின் சின்னமனூர் கிராமச்சாவடியில் வைத்து டெங்கு நோய் தடுப்பு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது . இதற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் தேனி மாவட்ட தலைவர் சாந்த் முஹம்மது தலைமை தாங்கினார் . K.K.குளம் ஜமாஅத் தலைவர் அப்துல் மஜீத் , சின்னமனூர் காவல்துறை ஆய்வாளர் வினோஜி , நகராட்சி துப்பரவு ஆய்வாளர் அரசகுமார் , அரசு அதிகாரி டாக்டர்.K.சிராஜுதீன் , தென்மாவட்ட ஜமாஅத்துல் உலமா தலைவர் மௌலவி.முஹம்மது ஆதம் ரஷாதி , நகராட்சி ஆணையாளர் அப்துல் ரஷீத் , நகராட்சி துப்பரவு அலுவலகர் சுந்தராஜான் , முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தலைவர் சிராஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் – தேனி மாவட்டம் கூடலூரில் நடந்த தெருமுனைக்கூட்டம்

Posted On :Wednesday December 12, 2012

Image
தேனி : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் கூடலூர் காந்தி கிராம இஸ்லாமிய இளைஞர் சங்கம் சார்பில் \”இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள்\”எனும் தலைப்பில் தெருமுனைக் கூட்டம் 01.12.2012 அன்று தேனி மாவட்டம் கூடலூரில் வைத்து நடைபெற்றது . இத்தெருமுனைக்கூட்டதிற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் கம்பம் நகர தலைவர் சிக்கந்தர் ஜெய்லானி தலைமை தாங்கினார் . கூடலூர் அஜ்மீர் காஜா வரவேற்புரையாற்றினார் . தேனி மாவட்டம் அறிவகம் மதரசாவின் ஆசிரியர் காஜா மைதீன் ரியாஜி மற்றும் கம்பம் அஜிஸ்ய்யா மஸ்ஜிதின் இமாம் சம்சுல் ஆலம் உஸ்மானி ஆகியோர் சிறப்புரையாற்றின்னர்கள் . அஹமது மீரான் நன்றியுரையாற்றினார் .

கம்பத்தில் நடந்த SDPI கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

Posted On : Wednesday December 12, 2012

Image
தேனி : SDPI கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் கம்பத்தில் 09.12.2012 அன்று மாலை 6.00 மணியளவில் பாவலர் படிப்பகம் அருகில் காயிதே மில்லத் திடலில் வைத்து நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு SDPI கட்சியின் கம்பம் நகர தலைவர் நிஜாமுதீன் தலைமை தாங்கினார் . நகர துணைத்தலைவர் முஹம்மது ரபீக் வரவேற்புரையாற்றினார்.SDPI கட்சியின் தேனி மாவட்ட தலைவர் காதர் முகைதீன் யூசுப் , மாவட்ட செயலாளர் முஹம்மது யூனுஸ் , மாவட்ட துணைத் தலைவர் திவான் அலி , பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் சாந்த் முஹம்மது மற்றும் SDTU மாவட்ட தலைவர் முஹம்மது சேட் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் .

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – தேனி பெரியகுளத்தில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்

Posted On : Sunday December 09, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 06.12.2012 அன்று மாலை 5.15 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையில் உள்ள கைலாசபாவா மண்டபத்தில் வைத்து . நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேனி மாவட்ட தலைவர் சாந்த் முஹம்மது தலைமை தாங்கினார் . பாப்புலர் ப்ரண்டின் பெரியகுளம் நகர தலைவர் மல்கர் சாதிக் வரவேற்ப்புரையாற்றினார் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் காதர் மைதீன் யூசுப் , பாப்புலர் ப்ரண்டின் உத்தமபாளையம் நகர தலைவர் கல்வத்துல்லாஹ் கான் , வருசநாடு நகர தலைவர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து தேனியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Thursday November 22, 2012

Image
காஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில்தேனீ மாவட்டத்தில் AKG திடலில் 19.11.2012 அன்று மாலை 5.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கம்பம் நகர தலைவர் சிக்கந்தர் ஜெய்லானி தலைமை தாங்கினார் . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாந்த் முஹம்மது கண்டன உரையாற்றினார் . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பாளையம் நகர தலைவர் கல்பத்துல்லாஹ் நன்றியுரை

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! தேனீயில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On :Friday September 21, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் : பெரியகுளம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடத்தப்பட்ட பெருநாள் தின விளையாட்டு நிகழ்ச்சி

Posted On :Thursday August 23, 2012

Image
தேனி மாவட்டம் : பெரியகுளம் வடகரை பழய பஸ் நிலையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் பெரியகுளம் வட்டார முஸ்லிம் இளைஞர் விளையாட்டு குழு சார்பாக பெருநாள் தின விளையாட்டு நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் தேனி மாவட்ட தலைவர் கைகர் தலைமை தாங்கினார்.தொழிலதிபர் ஏ.முஸ்தபா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.