Breaking News

Districts News

school-chalo-nagai-8

நாகை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக “பள்ளிசெல்வோம்”(SCHOOL CHALO) என்ற பிரச்சாரம் இந்திய தேசம் முழுவதும் நடைபெற்றுவருகிறது. இந்த பிரச்சாரத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து கல்விவிழிப்புணர்வு

0 comments
20160809_172602

நாகை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற இலவச தையற்பயிற்சி துவக்க விழா!

நாகை மாவட்டம் நாகூர்-தெத்தி கிராமத்தில் சுனாமி மீள்குடியேற்ற பகுதியான சமத்துவ நகரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக பெண்களுக்கான இலவச தையற்பயிற்சிபள்ளி துவக்க விழா

0 comments
sdpi

SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகை தாஜ் மரணம்! – மாநில தலைவர் இரங்கல்!

SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்த தாஜூதீன் அவர்கள் நாகை மாவட்டத்தின் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவராக

0 comments

நாகை மாவட்டம் தெத்தியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைப்பெற்ற தன்னார்வாளர்களுக்கான பயிற்சி முகாம்!

Posted On : Thursday May 21, 2015

Image
மத்திய பா.ஜ.க அரசால் சச்சார் கமிட்டியின் அறிக்கையை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட பேராசிரியர் அமிதாப் குண்டு தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை செப்டம்பர் 29 ல் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாஹ் அவர்களிடம் சமர்ப்பித்தது. இவ்வறிக்கை சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை கல்வி மற்றும் பெருளாதாரத்தில் முன்னேற்ற வழிவகை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் சமூகத்தில் பின்தங்கி இருக்கும் முஸ்லிம்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக பள்ளி செல்வோம் – School Chalo என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஒவ்வொரு வருடமும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தி வருகின்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்!

Posted On :Tuesday February 17, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இயக்க தினமான பிப்ரவரி 17 அன்று தேசம் முழுவதும் பேரணிகள், அணிவகுப்பு,கொடியேற்றும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு சமூக சேவைகள் மூலமாக இயக்க தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் நாகை அடுத்த தெத்தியில்(சமரசம்நகர்) பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுதுறை சார்பாக பிப்ரவரி 16 அன்று சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டியும்,பிப் 17-ல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நாளாக இரு தினங்கள் நடத்தப்பட்டது.

மயிலாடுதுறையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான தர்ணா!

Posted On :Saturday December 06, 201

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நாகை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு!

Posted On :Thursday October 30, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “ஆரோக்கியமான மக்கள்-வலிமையான தேசம்” என்ற தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர்15 முதல் 30 வரை நடைபெற்றது.

நாகை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக இலவச டியூஷன் சென்டர் திறப்பு விழா!

Posted On :Sunday September 28, 2014

Image
நாகை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக இலவச டியூஷன் சென்டர் திறப்புவிழா நிகழ்ச்சி 28.09.2014 அன்று மாலை 5 மணிக்கு தெத்தி சமரசம் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நாகை மாவட்ட தலைவர் ரபீக் மரைக்காயர் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தெத்தி ஜமாஅத் தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நாகை மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு நாகை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு!

Posted On :Friday September 19, 2014

Image
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On : Friday June 20, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது.

நாகை மாவட்டத்தில் மக்கள் விரோத சட்டமான UAPA-ஐ திரும்ப பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

Posted On : Friday February 21, 2014

Image
கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத சட்டமான UAPA வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு சட்டம்) திரும்ப பெற வலியுறுத்தி “UAPA விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம்!

Posted On : Saturday December 07, 2013

Image
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் டிசம்பர் 6 பாபர் மசூதி நினைவு தின கருத்தரங்கம் பாபர் மசூதி மீட்பும் பாஸிஸ எதிர்ப்பும் கருத்தரங்கம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் சைக்கிள் பேரணி!

Posted On :Thursday November 14, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

எகிப்து இராணுவத்தை கண்டித்து நாகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday August 24, 2013

Image
நாகை: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது.

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சார மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

Posted On :Saturday June 01, 2013

Image
நாகை மாவட்டம் சார்பாக நாகப்பட்டிணம், ஆழியூர், திருப்பூண்டி மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் பள்ளி செல்வோம் பிரச்சார விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதன் முதல் நிகழ்ச்சியாக துவக்க விழா நாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நாகை மாவட்ட தலைவர் ரபீக் மரைக்கார் தலைமை தாங்கினார்.

நாகையில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Sunday April 28, 2013

Image
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் அவுரித் திடலில் 26/04/13 அன்று மாலை 5 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் நாகை மாவட்ட தலைவர் ரபீக் மரைக்காயர் தலைமை தாங்கி ஆர்பாட்ட கோஷங்களை துவங்கி வைத்து தலைமை உரையாற்றினார்.

நாகையில் இலங்கையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

Posted On :Tuesday April 02, 2013

Image
இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசாங்கத்தையும் வன்மையாக கண்டிக்கும் வகையிலும் , மத்திய அரசு உடனே தலையிட்டு முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி 01.04.2013 அன்று மாலை நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் முகம்மது ரபீக் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் குத்தூஸ் கண்டன உரையாற்றினார்.

நாகை மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் பள்ளிவாசல் சுத்தம் செய்யப்பட்டது!

Posted On :Wednesday March 20, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக நாகை மாவட்டம் கிளியனூர் கிளை சார்பாக மார்ச் 18 அன்று கிளியனூர் பள்ளிவாசல் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

நாகையில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

Posted On :Tuesday March 19, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் எடுத்துக்கட்டி சாத்தனூரை சேர்ந்த P.முகம்மது தெளபிக் என்ற மாணவனுக்கு கல்வி உதவித் தொகை ரூ.4000/ நன்கொடையாளரிடமிருந்து பெற்று சங்கரன்பந்தலை சேர்ந்த பாப்புலர் ப்ரண்டின் நிர்வாகி சகோதரர் நஜீர் மூலம் வழங்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – நாகை மாவட்டம் நீடூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

Posted On :Tuesday February 19, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூரில் மாவட்டத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நாகை மாவட்ட தலைவர் ரபீக் மரைக்கார் தலைமை தாங்கினார். நிசார் அகமது, M.Y. முகம்மது தாரிக், தாஜ்தீன், சபீர் அகமது (சேந்தமங்கலம் நாட்டாண்மை), சுல்தான் இப்ராஹீம், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Monday February 18, 2013

Image
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தின் மயிலாடுதுறை வட்டப்பகுதியில் 13 கிளைகளிலும், நாகை வட்டப்பகுதிகளில் 32 இடங்களிலும் என மொத்தம் 45 இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது .

நாகையில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது

Posted On : Monday January 28, 2013

Image
நாகை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக நாகை மாவட்டம் எலந்தங்குடியை சேர்ந்த சுல்தான் இப்ராஹீம் அவர்களது மகள் கல்வி செலவிற்காக ரூ15,000/- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது . கல்வி உதவித்தொகையை SDPI கிளைத்தலைவர் ஜியாவுதீன் பெண்ணின் தாயாரிடம் வழங்கினார் .

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – நாகை திருப்பூண்டியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

Posted On :Sunday December 09, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 06.12.2012 அன்று நாகை மாவட்டம் திருப்பூண்டியில் வைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நாகை மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார் . பாப்புலர் ப்ரண்டின் காரை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹஸன் குத்தூஸ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது தாஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் . பாப்புலர் ப்ரண்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் நன்றியுரையாற்றினார் . இதில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! நாகப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On :Friday September 21, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.