Breaking News

Districts News

Posts not found

விழுப்புரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி!

Posted On :Monday January 26, 2015

Image
இந்திய திருநாட்டின் 66-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஷேக் உஸ்மான், SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பாசிச எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகம்!

Posted On : Friday February 28, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

விழுப்புரம் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!

Posted On :Sunday February 16, 2014

Image
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் 16.02.2014 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் M. Y. அப்பாஸ், அபூபக்கர் சித்திக் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On : Monday February 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள்மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

விழுப்புரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Friday January 17, 2014

Image
மது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் பாப்புலர் ஃபரண்ட் சார்பாக டெங்கு விழிப்புணர்வு மற்றும் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On : Saturday November 30, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரசாரம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் சைக்கிள் பேரணி,யோகா பயிற்சி,மருத்துவ முகாம்களும் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சமூகமே விழித்தெழு கருத்தரங்கம்!

Posted On :Monday November 25, 2013

Image
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அன்னை திருமண மண்டபத்தில் 24.11.2013 அன்று காலை 10.30 மணிக்கு சமூகமே விழித்தெழு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

சிறை நிரப்பு பேராட்டம் ஏன்? விழுப்புரத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

Posted On :Wednesday October 02, 2013

Image
அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்த இருக்கிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – கடலூர் மங்கலம்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

Posted On :Tuesday December 11, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக கடலூர் மாவட்டம் மங்கலப்பேட்டையில் டிசம்பர் 6 அன்று நடக்க தீர்மானித்த பொதுக்கூட்டத்திற்கு காவல் துறைஅனுமதி மறுத்ததால் ,டிசம்பர் 9 அன்று மாலை 6.30 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்டின் கடலூர் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் தலைமை தாங்கினார் . மாவட்ட செயலாளர் பரக்கத்துல்லாஹ் வரவேற்ப்புரையாற்றினார். மஸ்ஜிதே நூர் மஸ்ஜிதின் முத்தவல்லி அக்பர் ஷா , SDPI கட்சியின் மாவட்ட பொருளாளர் முஹம்மது ஹனீப் மற்றும் பாப்புலர் பிராண்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் .

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் : ஃபித்ரா (உணவு பொருட்கள்) பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வழங்கப்பட்டது.

Posted On :Wednesday August 29, 2012

Image
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை மற்றும் பண்ருட்டி, விழுப்புரம் மாவட்டம் உழுந்தூர்பேட்டை, பாண்டிசேரி ஆகிய மாவட்டங்களில் ஏழை முஸ்லிம்களுக்கு ஃபித்ரா (உணவு பொருட்கள்) பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வசூல் செய்து வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் திறக்கப்பட்டது

Posted On :Tuesday February 21, 2012

Image
அலுவலகத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்துகின்றார் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் அலுவலகம் 18.02.2012 அன்று திறக்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கமாக பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் மு.முஹம்மது இஸ்மாயில் பாப்புலர் ஃப்ரண்டின் கொடியை ஏற்றினார்.