Breaking News

Districts News

20161021_175931_Richtone(HDR)

காஞ்சிபுரம் மாவட்டம் நேதாஜி நகரில் நடைபெற்ற சர்வ சிக் ஷா கிராம் (முழுமையான கல்வி கிராமம்) துவக்க விழா நிகழ்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக சர்வ சிக்ஷா கிராம் (முழுமையான கல்வி கிராமங்களை உருவாக்குதல்) திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம்

0 comments
14566224_1171275412951122_5394221455622917406_o

மத்திய பா.ஜ.க அரசே “வெறுப்பு அரசியலை நிறுத்து” – தாம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்!

மத்திய பாஜக அரசே! வெறுப்பு அரசியலை நிறுத்து (Stop Politics Of Hate) என்ற தேசம் தழுவிய பிரச்சாரம் 2016 செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 3

0 comments
13339704_1075987409146590_7984278355948977981_n

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி!

புதிய சமூக, பொருளாதார , அரசியல் மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டம் அலுவலகம் திறப்புவிழா நிகழ்ச்சி 03-06-2016

0 comments

தொடரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வெள்ள நிவாரண பணிகள்!

Posted On :Wednesday November 25, 2015

Image
காஞ்சிபுரம் மாவட்டம் நேதாஜி நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (25-11-2015) நேரில் சந்திந்து ஆறுதல் கூறியதோடு நிவாரண உதவிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் M.முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் M.நாகூர் மீரான், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அஹமது முஹைதீன் (எ) குட்டி ஆகியோர் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக காட்டுமிராண்டித்தனத்திற்கெதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Sunday October 11, 2015

Image
“உண்பது எனது உரிமை” “பேசுவது எனது உரிமை” என்ற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் அக்டோபர் 9 முதல் 18 வரை காட்டுமிராண்டித்தனத்திற்கெதிராக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தாம்பரம் சண்முகம் சாலையில் இன்று (11-10-2014) மாலை 4:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக காஞ்சிபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மக்கள் சங்கமம் மாநாடு!

Posted On :Sunday April 19, 2015

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 110 இடங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக காஞ்சிபுரத்தில் மக்கள் சங்கமம் மாநாடு 19-04-2015 அன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி!

Posted On :Monday January 26, 2015

Image
இந்திய திருநாட்டின் 66- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அஹமது முஹைதீன் அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

Image
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒரே நாளில் ஒரு லட்சம் இரத்ததான கொடையாளர்களை சேர்க்கும் முகாம்!

Posted On :Friday October 17, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இரத்ததான தன்னார்வு குழுவின் சார்பாக ஒரே நாளில் ஒரு லட்சம் இரத்ததான கொடையாளர்களை சேர்க்கும் முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

காஞ்சிபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

Image
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Tuesday July 15, 2014

Image
வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயிற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. இந்த புனித ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும், சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு இடங்களில் ஜமாத்தார்களை ஒருங்கினைக்கும் விதமாக இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சமூக ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி!

Posted On :Thursday June 26, 2014

Image
காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி 26.6.2014 அன்று காஞ்சிபுரம், ஒ.எம்.ஆர் துரைபாக்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எம். ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :February 25, 2014

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

Posted On :Friday January 17, 2014

Image
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம்!

Posted On :Monday November 25, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவ மனைகளை தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரத்தில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted On :Friday April 26, 2013

Image
காஞ்சிபுரம் : வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் 26.04.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாவரம் பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவர் அஹமது முஹையதீன் தலைமையில், மாவட்ட செயலாளர் யாசர் அரஃபாத் முன்னிலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் ஜுனைத் அன்சாரி முஹம்மது அன்சாரி ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார் .

காஞ்சிபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்!

Posted On : Monday March 25, 2013

Image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் நூர் பள்ளிவாசல் அருகில் 24.03.13 அன்று காலை 10 மணியளவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி & பாப்புலர் ஃப்ரண்ட் இணைந்து நடத்திய புனித ஹஜ் பயண பாஸ்போர்ட் விழிப்புணர்வு முகாம்

Posted On :Monday March 04, 201

Image
ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புனித ஹஜ் பயண மேற்கொள்பவர்களுக்கு உதவி செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் பிப்ரவரி 26, 27ம் தேதிகளில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான பாஸ்போர்ட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : தாம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

Posted On : Monday February 18, 2013

Image
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் ” யூனிட்டி மார்ச் ” என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் M.முஹம்மது இஸ்மாயீல் துவக்கவுரை நிகழ்த்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியானது சரியாக 3 மணியளவில் காந்தி சாலையில் துவங்கி சண்முகம் சாலையில் நிறைவுபெற்றது. தொடர்ச்சியாக பேரணியின் முடிவில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

Posted On :Friday February 15, 2013

Image
காஞ்சிபுரம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கவுள்ளது. இந்தியாவில் நடந்த சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது காலடித்தடங்களை பதித்து வருகின்றது.

காஞ்சிபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்

Posted On :Thursday January 31, 2013

Image
காஞ்சிபுரம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் 27.01.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது .

காஞ்சிபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலக திறப்பு விழா

Posted On :Monday December 31, 2012

Image
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தும் முகமாக, தாம்பரம் நகரத்தில் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பது என நவம்பர் மாத செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – தாம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

Posted On :Friday December 14, 2012

Image
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 06.12.2012 அன்று மாலை 7.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் மார்கெட் மஸ்ஜித் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இப்பொதுக்கூட்டதிற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அஹமது முஹைதீன் தலைமை தாங்கினார் . பாப்புலர் ப்ரண்டின் சலாஹுதீன் வரவேற்புரையாற்றினார்.ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி.செய்யது இப்ராஹீம் உஸ்மானி மற்றும் SDPI கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள் . இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர் .