Breaking News

Content

நரேந்திர மோடியின் தமிழக வருகையை கண்டித்து திருச்சியில் SDPI கட்சி தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், 500 க்கும் மேற்பட்டோர் கைது!

Posted On :Thursday September 26, 2013

பலஆயிரம் முஸ்லிம்களின் படுகொலைக்கும், பாலியல் வன்முறைக்கும், பலஆயிரம் கோடி முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டதற்கும் காரணம் ஆன நரேந்திர மோடி தமிழகம் வருவது பெரியார், அண்ணா பிறந்த தமிழகத்திற்கு அவமானம். எனவே மோடியின் தமிழக வருகையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மாபெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் சென்னையிலும், திருச்சியிலும் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திருச்சியில் காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்ததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு டோல்கேட் அருகே கருப்புக்கொடியுடன் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் தலைமை தாங்கினார்.மாநில செயலாளர் அப்துல் சத்தார் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் முபாரக்,மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி,மாவட்ட பொது செயலாளர் அப்துல் ரஹீம்,மாவட்ட் செயலாளர்கள் ரஹ்மத்துல்லாஹ்,ரபீக் முஹம்மது,மாநில செயற்குழு உறுப்பினர்கள் சம்சுதீன், மீரான் முஹைதீன்,முஹம்மது யாசின்,சகாபுதீன்,அப்துல் காதர்,அஹமதுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 500 அதிகமான கட்சி தொண்டர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து காவல்துறையினரால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் கூறியதாவது, 2002 குஜராத் கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பல ஆயிரம் கோடி ருபாய் சொத்துக்கள் சூரையாடப்பட்டன. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையாகும். இதற்கு காரணமானவர்தான், இந்த நரேந்திர மோடி. இது நடைபெற்று 12 ஆண்டுகள் ஆகியும், இன்னும் குற்றவாளிகள் கைது செய்து தண்டிக்கப்படவில்லை. குற்றவாளிகளை மோடி காப்பாற்றி வருகிறார் இந்த குற்றங்களை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவைத்தான் நாம் எதிர்த்து போராடி வருகிறோம். இனப்படுகொலை நாயகன் ராஜபக்சேவும் நரேந்திரமோடியும் ஒன்றுதான். எனவே ராஜபக்சே போன்று மோடியும் எல்லோராலும் எதிர்க்கப்பட வேண்டியவர். எனவே தான் ராஜபக்சேவிற்கு எதிராக போராடும் எஸ்.டி.பி.ஐ கட்சி மோடிக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்துகிறது.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவால் பண்படுத்தப்பட்ட இந்த மண்ணில் மோடி கால் வைப்பது, தமிழகத்திற்கு அவமானம். எனவே மோடியின் வருகையை நாங்கள் எதிர்க்கிறோம்.