Breaking News

Content

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி கடனுதவி – 2013!

Posted On :Saturday September 28, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கும் கல்வி கடனுதவி இன்று (28-09-2013) திருச்சியில் K.M.S. மஹாலில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் M.முகம்மது இபுராஹிம் தலைமை தாங்கினார்,சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் S.ஷஃபியுல்லாஹ் அவர்களும், SDPI கட்சியின் மாவட்ட தலைவர் M.முபரக் அலி அவர்களும், ஆல் இந்திய இமாம் கவுன்சில் மாவட்ட தலைவர் S.இனாமுல் ஹஸன் காஷிபி அவர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 42 மாணவ, மாணவிகளுக்கு மூன்று லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் A.முகம்மது சித்திக் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.