Breaking News

Content

சிறை நிரப்பு பேராட்டம் ஏன்? திருச்சியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

Posted On :Tuesday October 01, 2013

“அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்த இருக்கிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது. இதற்கான தெருமுனை பிரச்சாரம் திருச்சியில் நடைபெற்றது.