Breaking News

Content

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரசாரம்

Posted On :Monday November 25, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரசாரம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. திருச்சியில் பல்வேறு பகுதிகளில் சைக்கிள் பேரணி , யோகா பயிற்சி , மருத்துவ முகாம்களும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ஆழ்வார்தோப்பு ஹிதயாத்நகர் பள்ளிவாசல் அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் நியூ அமெரிக்கன் ஆப்டிகல்ஸ் இணைத்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு M.ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார். இம்முகாமை மதினா பள்ளிவாசல் தலைவர் P.சிக்கந்தர் அவர்கள் தொடக்கி வைத்தார். ஹாஜி A.M. ஜெய்லாப்தீன் , ஹிதாயத் இஸ்லாம் ஷாபி பள்ளிவாசல் தலைவர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைபாளர்களாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் சபியுல்லா மற்றும் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் K.முபாரக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 350-கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.