Breaking News

Content

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி!

Posted On :Tuesday June 10, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “பள்ளி செல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் மே-15 முதல் ஜூன்-30 வரை தேசிய அளவில் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதும், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்துவதும், மற்றும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்குவதும் என தேசம் முழுவதும் பல சமூக நலபணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒருலட்சதிற்கும் மேற்பட்ட பள்ளி உபகரணங்கள் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் கோலாகலமாக தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் 10-06-2014 அன்று ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) என்ற கல்வி விழிப்புணர்வு பேரணி உக்கடை அரியமங்கலத்தில் துவங்கியது. இப்பேரணியில் 300க்கும் மேற்ப்பட்ட சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு கல்வி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கோசங்களும் எழுப்பட்டன. இந்த நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் I. சபியுல்லாஹ் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான் அவர்கள் வரவேற்புரையும் பள்ளி தலைமை ஆசிரியை வாழ்த்தியும் பேசினர். இறுதியாக சௌகத் அலி அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.