Breaking News

Content

திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் சிறுபான்மையின மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகையை பெற நடைபெற்ற விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்!

Posted On :Wednesday June 25, 2014

திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் அரியமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அரசின் கல்வி உதவித்தொகையை சிறுபான்மையின மாணவர்களுக்கு பெற்றுத்தரும் பொருட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம் நடைபெற்றது. இம்முகாமை திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பகுதி தலைவர் சௌகத் அலி அவர்கள் முன்னின்று வழி நடத்தினார். இம்முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டனர்.