Breaking News

Content

ஃபலஸ்தீன் மீது தொடரும் இஸ்ரேலின் கொலைவெறித்தாக்குதலை கண்டித்து திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday July 12, 2014

உலக பயங்கரவாத நாடான இஸ்ரேல் கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது. சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும். இந்த கொடுஞ்செயலை கண்டித்தும், மேலும் இந்தியா மற்றும் உலக நாடுகள் இஸ்ரேல் உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும். ஐ.நா.சபை உடனடியாக தலையிட்டு இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்து திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இன்று (12/7/2014) மாலை 5.30 மணியளவில் ராமகிருஷ்ணா பாலம் அருகில் பாலஸ்தீனில் அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யும் பயங்கரவாதி இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் A.முகமது சித்திக் அவர்கள் தலைமை உரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் I.சபியுல்லா அவர்கள் கண்டன உரையாற்றினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் S.S.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும், SDPI கட்சியின் செயல்வீர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்களும் மற்றும் பொதுமக்களும் பெரும்திரளாக கலந்து கொண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.