Breaking News

Content

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

Posted On :Sunday July 13, 2014

வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயிற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. இந்த புனித ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும், சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு இடங்களில் ஜமாத்தார்களை ஒருங்கினைக்கும் விதமாக இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 13.07.2014 அன்று அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், ஜமாத் தலைவர்கள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 200 க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.