Breaking News

Content

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Wednesday July 16, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, வட்டியில்லா சிறு தொழில் கடனுதவி, குடிநீர் விநியோக திட்டம், இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள், நிவாரண உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் ஏழை எளிய மக்களும் நோன்பு நோக்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் ரமலான் மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிய “இஃப்தார் கிட்” என்னும் ரமலான் உணவு உபகரணங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சியில் ஏழை குடும்பங்களுக்கு இஃப்தார் கிட் வழங்கும் நிகழ்ச்சி 16.07.14 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் A.முகமது சித்திக் அவர்கள் கலந்துகொண்டு ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய இஃப்தார் கிட் வழங்கினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்நிகழ்ச்சியை தேசம் முழுவதும் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.