Breaking News

Content

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அமெரிக்கன் ஆப்டிகல்ஸ் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்!

Posted On :Friday August 15, 2014

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் “அமெரிக்கன் ஆப்டிகல்ஸ்” இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (15-08-2014) நடைபெற்றது. இந்த முகாமிற்கு A.நியமதுல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட 59வது வார்டு கவுன்சிலர் அறிவுடை நம்பி M .C அவர்கள் மருத்துவ முகாமை துவங்கி வைத்தார் . இந்த முகாமில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் A.முகமது சித்திக், SDPI கட்சியின் மாவட்ட தலைவர் S.S.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமினை உறையூர் பகுதி பாப்புலர் ஃப்ரண்ட்டின் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.