Breaking News

Content

திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ஷஹீத் திப்பு சுல்தான், டாக்டர் அம்பேத்கர், பகத் சிங், ஓளரங்கசிப், ஹைதர் அலி, அஷ்ஃபகுல்லாஹ் கான், அசாஃப் அலி, குஞ்சாலி மறைக்காயர், ஷாநவாஸ் கான், கிட்வை ரஃபீக் அஹமது போன்ற தியாகிகளை நினைகூறும் விதமாகவும், போராடி பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கவும், “சுதந்திரத்தின் காவலாளிகளாக இருப்போம்” என்ற முழக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் சுதந்திர தின பொதுக்கூட்டங்கள் மற்றும் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக காட்டூர் அண்ணாநகரில் தேசிய கொடி ஏற்றும் நிகழச்சி நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லாஹ் அவர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் சுதந்திர தின உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.