Breaking News

Content

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடக்கிறது. அதன் அடிப்படையில் திருச்சியில் இன்று காலை சரியாக 10:30 மணிக்கு ராமகிருஷ்ணா பாலம் அருகில் “நீதிக்கான ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் A.முஹம்மது சித்திக் தலைமை தாங்கினார். SDPI கட்சியின் திருச்சி மாவட்ட பொது செயலாளர் Y.அப்துல் ரஹீம் மற்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் M.பரக்கத் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக S.சம்சுதீன் மாநில துணை தலைவர் SDTU தொழிற்சங்கம், வழக்கறிஞர் V.ராஜாமணி மாநில துணை செயலாளர் வி.சி.க, தோழர் சிவசூரியன் மாநில குழு உறுப்பினர் CPI, S.P.ஆனந்தன் மாநில தலைவர் ஐக்கிய மனித உரிமை கழகம், S.S.ரகமத்துல்லாஹ் மாவட்ட தலைவர் SDPI கட்சி, இரா.பிரபு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி, தமிழாதன் புறநகர் மாவட்ட செயலாளர் வி.சி.க, M.சேகர் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம், தமீம் அன்சாரி மாவட்ட தலைவர் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா கண்டன உரையாற்றினார். இதில் பாபரி மஸ்ஜித் பள்ளியை மீண்டும் கட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி கண்டன கோஷம் எழுப்பட்டது. இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் S.அப்பாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார். இதில் திரளான மக்கள் கலந்துக்கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.