Breaking News

Content

புத்தாநத்தத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 06-12-2014 அன்று புத்தாநத்தத்தில் நீதிக்கான ஆர்ப்பாட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமர் முகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃ ப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் சுபஹதுல்லாஹ், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய துணை செயலாளர், ஜமாஅத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் I.சபியுல்லாஹ் அவர்கள் கண்டனயுரையாற்றினர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சகோதரர் முகமது ஹக்கீம் அவர்கள் நன்றியுரையாற்றினர். இதில் திரளான மக்கள் கலந்துக்கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.