Breaking News

Content

திருச்சியில் நடைபெற்ற இஸ்லாமிய கண்காட்சி திறப்புவிழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில் பங்கேற்பு !

Posted On :Friday December 19, 2014

அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் சார்பாக சகோதரத்துவ மாநாடு திருச்சியில் 19,20,21 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் ஒரு பகுதியாக இஸ்லாமிய கண்காட்சி திறப்புவிழா இன்று 19.12.2014 திருச்சி L.K.S அரிஸ்டோ மஹாலில் காலை 11.00 மணி அளவில் நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் A.இலியாஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக்கண்காட்சியை தொழிலதிபர் S.அகமது மீரான் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் A.அபுபக்கர் சித்திக், மாநாட்டுகுழு பொறுப்பாளர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் இஸ்லாமும் விஞ்ஞானமும், இஸ்லாமிய வரலாற்று குறித்த காட்சி படங்களும் இடம் பெற்றன. இக்கண்காட்சி எல்லோராலும் பெரிதும் பாரட்டப்பட்டது.