Breaking News

Content

திருச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற சகோதரத்துவ மாநாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் பங்கேற்பு!

Posted On :Sunday December 21, 2014

அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் நடத்திய சகோதரத்துவ மாநாட்டின் இறுதி நாளான 21.12.2014 அன்று சரியாக மாலை 4.30 மணி அளவில் நிறைவு நாள் பொதுக்கூட்டம், மால்கம் – X திடலில் (இஸ்லாம் ஓர் பரிபூரண வாழ்க்கைத் திட்டம்) என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்டது. இம்மாநாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் (TNDFT Managing Trustee) அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணை தலைவர் M.முஹம்மது ஷேக் அன்சாரி அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொது செயலாளர் A.ஹாலித் முகமது அவர்களும் முன்னிலை வகித்தனர். ஆண்கள் அறிவகம் பொறுப்பாளர் M.சையது இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் K.M.ஷரிப் அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் M.முகமது அலி ஜின்னா அவர்களும், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தேசிய துணைத்தலைவர் சகோதரி M.ஃபாத்திமா ஆலிமா அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இத்துடன் சகோதரத்துவ மாநாடு இனிதே நிறைவடைந்தது. இதில் பல்லாயிரக்கனக்காண அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு சகோதரத்துவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.