Breaking News

Content

திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி!

Posted On :Monday January 26, 2015

66 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் காலை 10 மணியளவில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் V.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் A.முஹம்மது சித்திக் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் s.s.ரஹ்மத்துல்லா, SDTU மாவட்ட தலைவர் சிராஜுதீன் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட பொதுச் செயலாளர் அஹமது மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.