Breaking News

Content

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி!

Posted On :Saturday February 28, 2015

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொருளாதார சூழல் மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்ய பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தமிழகம் முழுவதிலும் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யபட்டு உயர்கல்விக்கான உதவித்தொகைகள் வழங்கபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் 28-2-2015, சனிக்கிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறையின் சார்பாக ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட தலைவர் A. முஹம்மது சித்திக் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணை தலைவர் A.ஹாலித் முஹம்மது அவர்களும் ஜமால் முஹம்மது கல்லுரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் P.மன்சூர் அவர்ககளும் கலந்து கொண்டு தந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை வழங்கினார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் V.முஜிபுர் ரஹ்மான் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.