Breaking News

Content

திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக காட்டுமிராண்டித்தனத்திற்கெதிராக எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Tuesday October 13, 2015

“உண்பது எனது உரிமை! பேசுவது எனது உரிமை!!” என்ற முழக்கத்தோடு அக்டோபர் 09 முதல் 18 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்திய தேசம் முழுவதும் காட்டுமிராண்டிதனத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் 13-10-2015 அன்று மாலை சரியாக 5:15 மணியளவில் அண்ணாசிலை (மேலசிந்தாமணி அருகில்) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட தலைவர் A.முகம்மது சித்திக் அவர்கள் வரவேற்று தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் M.முஹம்மது ஷேக் அன்சாரி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் S.S.ரகமத்துல்லா அவர்களும், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் அ.க.தமிழாதன் அவர்களும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் கி.கமலகண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் திருச்சி மாவட்ட செயலாளர் V. முஜீபுர் ரஹ்மான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.