Breaking News

Content

சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! நாகர்கோவிலில் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம்

Posted On :Sunday September 16, 2012

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் முஹம்மது ஜுல்பி அவர்கள் தலைமை தாங்கினார்.இதில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.