Breaking News

Content

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை – திருவிதாங்கோட்டில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

Posted On :Thursday December 13, 2012

கன்னியாகுமரி : பாபரி மஸ்ஜித் சங்பரிவார பாசிஸ்டுகளால் திட்டமிட்டு இடிக்கப்பட்டு 20 வருடங்கள் கழிந்தும் அதில் இன்றளவும் நீதி மறுக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. டிசம்பர் 6 தினத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஃபாசிச எதிர்ப்பு தினமாக அனுசரித்து ‘பாபரி மஸ்ஜித் என்றும் நம் நினைவில்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெறுகிறது . தமிழகத்தில் டிசம்பர் 6 அன்று “பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டு ! குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு !!” எனும் முழக்கத்தோடு “பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை” என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் , கருத்தரங்குகள் , போஸ்டர் பிரச்சாரம் மற்றும் 1 இலட்சம் துண்டு பிரசுரங்கள் விநியோகம் என பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெறுகிறது . அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 06.12.2012 அன்று மாலை 6.00 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் தலைமை தாங்கினார் . மாவட்ட செயலாளர் அபுதாகிர் வரவேற்புரை ஆற்றினார் . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் பைஸல் அஹமது , எஸ்.டி.பிஐ கட்சியின் மாநில செயலாளர் நாஞ்சில்.செய்யது அலி , எஸ்.டி.பி.ஐ கட்சியின் குமரி மாவட்ட தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஜாகிர் ஹுசைன் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சுல்பிகர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் அபுதாகிர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலப் பொது செயலாளர் ஹாலித் முஹம்மது மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கேரள மாநில செயற்குழு உறுப்பினர் ஜோயிஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் . இறுதியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அன்வர் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது . இதில் திரளான மக்கள் கொண்டனர் . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலப் பொது செயலாளர் ஹாலித் முஹம்மது எஸ்.டி.பி.ஐ கட்சியின் கேரள மாநில செயற்குழு உறுப்பினர் ஜோயிஸ் கலந்து கொண்ட மக்கள்