Breaking News

Content

இடலாக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்

Posted On :Tuesday January 22, 2013

கன்னியாகுமரி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ” தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி முகாம் “கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடியில் உள்ள குத்பா பள்ளி எதிரில் 16.01.02013 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது . இம்முகாமின் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்தனர் . இம்முகாமிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் J.ரூஹுல் ஹக் தலைமை தாங்கினார் .KEMST தலைவர் F.அப்துல் அஜீஸ் , KEMST செயலாளர் S.ரபீக் அலி , KEMST பொருளாளர் P.A.சித்தீக் , KEMST தலைமை இமாம் G.S.பஸ்லுல் ஹக் மன்பஈ , மாலிக்தினார் பைத்துல்மால் ஜமாஅத் தலைவர் S.அப்துல் கபூர், 18வது வார்டு கவுன்சிலர் S.நுஸ்ரத் பாத்திமா , 17வது வார்டு கவுன்சிலர் கக்.சபீனா ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கோட்டார் காவல்துறை ஆய்வாளர் K.ஜெயபாண்டியன் முகாமை துவங்கி வைத்தார். SDPI கட்சியின் குமரி மாவட்ட தலைவர் S.M.ஜாஹீர் உசேன் வாழ்த்துரை வழங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட செயலாளர் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நாகர்கோவில் நகர தலைவர் S.பிர்தவ்ஸ் நன்றியுரையாற்றினார்.