Breaking News

Content

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : நாகர்கோவிலில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

Posted On :Thursday February 14, 2013

கன்னியாகுமரி: பாப்புலர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யூனிட்டி மார்ச் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தேசிய தலைமை முடிவு செய்துள்ளது.அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற 17.02.13 அன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அந்நிகழ்ச்சி சம்பந்தமாக நாகர்கோவிலில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முஹம்மது இலியாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிப்ரவரி 17 ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது.அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. கன்னியாகுமரி,திருச்சி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 17 ந்தேதி மாலை 3 மணிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து பேரணி புறப்படுகிறது. இந்த பேரணி அண்ணா ஸ்டேடியத்தை சென்று அடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசுப், மாநில பொருளாளர் பைசல் அஹமது மற்றும் செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இப்பத்திரிகையாளர் சந்திப்பின் போது மாநில பொருளாளர் பைசல் அஹமது மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் ஆகியோர் உடனிருந்தனர் .