Breaking News

Content

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

Posted On :Sunday February 17, 2013

கன்னியாகுமரி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் தாம்பரம், திருச்சி மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தின் திருவிதாங்கோடு , அழகியமண்டபம் , கோட்டார் , சூரங்குடி மற்றும் வேர்க்கிளம்பி ஆகிய இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது . திருவிதாங்கோட்டில் செய்யது அலியும், அழகியமண்டபத்தில் நூர்தீனும், வேர்கிளம்பியில் ஆசிக்கும் , கோட்டார் மற்றும் சூரன்குடியில் காஜாவும் கொடி ஏற்றினார்கள். திருவிதாங்கோட்டில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி வேர்கிளம்பியில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி அழகியமண்டபதில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி சூரன்குடியில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி கோட்டாரில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி