Breaking News

Content

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட்[NWF] நடத்திய மனித சங்கிலி போராட்டம்:

Posted On :Thursday March 14, 2013

நாகர்கோவில் : பெண்களின் பாதுகாப்பு! நாட்டின் பாதுகாப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மார்ச் -8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இம்மனித சங்கிலி போராட்டத்தில் பல தரப்பு பெண்கள் கலந்து கொண்டனர்.