Breaking News

Content

கன்னியாகுமரியில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய ஜமாஅத்தார்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Posted On :Sunday March 31, 2013

கன்னியாகுமரி: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மார்ச் – 29 அன்று மலை 4.30 மணி அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபா மாதர் சங்கத்தில் ஜமாத்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். M. ஷாஜஹான் அவர்கள் சட்ட விழிப்புணர்வு சம்பந்தமான கருத்துகளை வழங்கினார். ஜமாத்துகளின் முக்கியத்துவம் மற்றும் ஜமாத்துகள் மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவைகள் குறித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் காலித் முஹம்மது அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அபூதாகிர் அவர்கள் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.