Breaking News

Content

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்!!

Posted On :Saturday November 02, 2013

கன்னியாகுமரி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள் அரசு மருத்துவ மனைகள் மற்றும் பொது இடங்களை தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆரோக்கியம் குறித்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் விழிப்புணர்வு பிரச்சார மினி மாரத்தான் நவம்பர்- 1 மாலை 4.00 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இருந்து துவங்கியது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொருளாளர் S. பைசல் அஹமது அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாலை 5.00 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் திரு. J. ரூஹூல் ஹக் அவர்கள் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட செயலாளர் திரு N. அபுதாஹீர் MSc.MPhill., அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு திரு ஹாலீத் (குமரி மாவட்ட தலைவர் KIMS),நாஞ்சில் செய்யத் அலி(மாநில செயலாளர் SDPI),ஸ்காட் கிரித்துவ கல்லூரியின் முதல்வர் DR.ப்ரைட் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பிரச்சாரத்தின் கருத்துரையை பாப்புலர் ஃப்ரன்டின் மாநில பொருளாளர் s.பைசல் அஹமது அவர்கள் வழங்கினார்.ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு புத்தகமும் வெளியிடப்பட்டது.இதனை திரு.நாஞ்சில் செய்யத் அலி வெளியிட DR.ப்ரைட் செல்வம் பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.