Breaking News

Content

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் – கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Tuesday February 25, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் இராமநாதபுரத்தில் “யூனிட்டி மார்ச்” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குமரிமாவட்டத்தின் சார்பாக மிக விமர்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக மாவட்டத்தின் பல இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது . திருவிதாங்கோடு, அழகியமண்டபம், சுவாமியார்மடம், வேர்கிளம்பி, குளச்சல், தேங்காப்பட்டணம், கோட்டார், இளங்கடை, சூரங்குடி, திட்டுவிளை, மேலும் குமரிமாவட்ட தலைவர் ரூஹுல்ஹக் அவர்கள் கோட்டரிலும், மாவட்டசெயலாளர்அபூதாகிர் அழகியமண்டபதிலும் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.செய்யது அலி அவர்கள் திருவிதாங்கோட்டிலும். பகுதிநிர்வாகிகள் அந்தந்த பகுதிகளிலும் கொடியேற்றினர்கள்.