Breaking News

Content

கன்னியாகுமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற மினி மாரத்தான் மற்றும் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி!

Posted On :Friday August 15, 2014

68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. ஆங்கிலேயேர்களின் அடக்குமுறைக்கு எதிராக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இந்திய நாடு சுந்திரம் அடைய களமிறங்கி போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ஷஹீத் திப்பு சுல்தான், டாக்டர் அம்பேத்கர், பகத் சிங், ஓளரங்கசிப், ஹைதர் அலி, அஷ்ஃபகுல்லாஹ் கான், அசாஃப் அலி, குஞ்சாலி மறைக்காயர், ஷாநவாஸ் கான், கிட்வை ரஃபீக் அஹமது போன்ற தியாகிகளை நினைகூறும் விதமாகவும், போராடி பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கவும், “சுதந்திரத்தின் காவலாளிகளாக இருப்போம்” என்ற முழக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் சுதந்திர தின பொதுக்கூட்டங்கள் மற்றும் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தக்கலையில் மினி மாரத்தான் மற்றும் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணியளவில் திருவிதாங்கோடு, நடுக்கடை ஜங்ஷன் அருகில் இருந்து மினி மாரத்தான் துவங்கியது. தக்கலை காவல் ஆய்வாளர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்கள் மினி மாரத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தக்கலை நகர தலைவர் நூர்தீன் ஃபைசல் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆஷிக் அவர்கள் வரவேற்ப்புரையாற்றினார். திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் ஜனாப் ஹாஜி முஹம்மது ஹனிபா அவர்கள் தேசிய கொடியேற்றி சிறப்பித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரசாக் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சுதந்திர தின உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. இறுதியாக இனிப்புகள் வழங்கப்பட்டது.