Breaking News

Content

குமரி மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக‌ நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!

Posted On :Sunday August 24, 2014

வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. இந்த புனித ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும், சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாகர்கோவில் கோட்டாறு பாவாகாசிம் சமூக நலக்கூடத்தில் வைத்து 24.8.2014 அன்று இரவு 7 மணிக்கு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரூகுல் ஹக் அவர்கள் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத்தலைவர் சுல்பிக்கர் அலி, துணைத்தலைவர் ஜாஹீர் உசேன், மாவட்ட செயலாளர்கள் பிர்தவ்ஸ், முகம்மது நூகு, பொருளாளர் கலீல் ரகுமான் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், சமூக பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ப்ரண்டின் தக்கலை நகர தலைவர் நூறுதீன் பைசல் அவர்கள் வரவேற்புரையாற்றினார். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொது செயலாளர் ஹாஜா முஹைதீன், நேஷனல் விமன்ஸ் ப்ரண்டின் மாவட்ட தலைவர் ரஹ்மத் நிஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொது செயலாளர் காலித் முஹம்மது ஆகியோர் சிறப்புரையாற்றினார். திட்டுவிளை ஏரியா தலைவர் முஹம்மது ரிஸ்வான் அவர்கள் நன்றியுரையாற்றினார். நாகர்கோவில் நகர தலைவர் இப்ராஹீம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.