Breaking News

Content

குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்!! விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் பிரச்சாரம்!

Posted On :Friday October 17, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்!! என்ற தலைப்பில் நாடு முழுவதும் பல்வேறு பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி 17.10.2014 அன்று மாலை 4.30 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு துவங்கியது. மாரத்தான் நிகழ்ச்சியை குமரி மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் அவர்கள் துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகம் முன்பு துவங்கிய மாரத்தான் நிகழ்ச்சி அண்ணா விளையாட்டரங்கில் வைத்து முடிவடைந்தது. அங்கு உடற்பயிற்சியின் தேவையை உணர்த்தும் வண்ணம் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் சுல்பிக்கர் அலி, மாவட்ட துணைத்தலைவர் ஜாஹீர் ஹுசைன், மாவட்ட பொது செயலாளர் காஜா முகைதீன், மாவட்ட செயலாளர்கள் நூஹ், பிர்தவ்ஸ், மாவட்ட பொருளாளர் கலீல் ரகுமான், பாப்புலர் ப்ரண்டின் நகர தலைவர்கள் இப்ராகீம், நூறுத்தீன், ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் இசுலாமிய கலாச்சார கழக பள்ளிவாசலின் தலைமை இமாம் சவுக்கத் அலி உஸ்மானி உடற்பயிற்சியின் தேவை குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.