Breaking News

Content

நாகர்கோவிலில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

Posted On :Saturday December 06, 2014

டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் – என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 06-12-2014 அன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு வைத்து மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்ற‌து. இந்த ஆர்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் மாஹின் அவர்கள் தலைமை தாங்கினார். என்.சி.ஹெச்.ஆர்.ஓ தேசிய பொது செயலாளர் வழக்கறிஞர் இரா.ச.தங்க சாமி, மவுலவி.சவுக்கத் அலி உஸ்மானி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் பகலவன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் சுல்பிக்கர் அலி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் அபுதாகீர், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவி ரஹ்மத் நிஷா ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் ரூஹூல் ஹக் அவர்கள் நன்றியுரையாற்றினர். இந்த ஆர்பாட்டத்தில் அனைத்து ஜமாத்திற்கு உட்பட்ட சமூக மக்கள், நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.