Breaking News

Content

வெள்ளாடிச்சி விளை பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்ய கோரி கன்னியாகுமரி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Wednesday January 07, 2015

இடலாக்குடி வெள்ளாடிச்சி விளை பகுதியில் கடந்த 2ம் தேதி காலை 9.30 மணியளவில் பாஜகவை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் அரிவாள், இரும்பு கம்பி உட்பட பலத்த ஆயுதங்க்களுடன் முஸ்லிம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 30க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி உள்ளனர். அரசு பேருந்து உட்பட 20 க்கும் மேற்பட்ட வாகனங்களை கல் வீசி தாக்கி உள்ளனர். மேலும் ஷேக் அலி என்ற அப்பாவி முஸ்லிம் கூலி தொழிலாளியை கடுமையாக தாக்கி உள்ளனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்று வருகிறார். இத்தகய வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய பாஜகவினரின் பெயர் மற்றும் முகவரியை காவல்துறையிடம் கொடுத்த பின்பும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது காவல்துறையின் ஒரு பக்க சார்பையே காட்டுகிறது. இதை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி கன்னியாகுமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இன்று(7.1.2015) நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு வைத்து காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.மாகீன் அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரூஹூல் ஹக், நகர தலைவர்கள் இப்ராகீம், நூறுத்தீன், ரிஸ்வான், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் சுல்பிக்கர் அலி, மாவட்ட பொது செயலாளர் ஹாஜா மைதீன், துணை தலைவர் ஜாகீர் ஹுசைன், மாவட்ட செயலாளர்கள் நூஹ், பிர்தவ்ஸ், மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் செய்யது அலி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் சாகுல் ஹமீது மற்றும் பல்வேறு ஜமாத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது அலி கண்டன உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அனைத்து ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.ராளமானோர் கலந்து கொண்டனர்.